Kalaiganar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது? முழு விவரம்
Kalaiganar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1/9கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaiganar Magalir Urimai Thogai) திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு குட் நியூஸ் வந்துவிட்டது. புதிய விண்ணப்பங்களை அரசு பரிசீலிக்க தொடங்கிவிட்டது.
2/9பஞ்சாயத்து வாரியாக பெண்கள் புதிதாக கொடுத்த விண்ணப்பங்களில் தகுதியான பெண்களை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்
3/9இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு பெண்களுக்கு மிகப்பெரிய தீபாவளி பரிசாக அமைந்துவிட்டது.
4/9அதேநேரத்தில் புதிதாக விண்ணப்பித்து, தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மத்தியில் எழலாம்.
5/9இது குறித்து தமிழ்நாடு அரசு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்ட பிறகு இந்த அறிவிப்பு வெளியாகும்.
6/9அது என்னவென்றால், புதிய விண்ணப்பதாரர்களில் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதிகள் இருந்தும் நிராகரிக்கப்பட்டதாக கருதுபவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவிக்கும்
7/9என்ன காரணத்துக்காக உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என்பதை ஏற்கனவே, மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு தெரிவிக்கப்படும். அந்த காரணம் உண்மை இல்லை என நீங்கள் நினைத்தால், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.
8/9இதற்காகவே குறிப்பிட்ட காலவகாசத்தை தமிழ்நாடு அரசு கொடுக்கும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி தகுதியான பெண்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேருவதற்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
9/9எனவே, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மீண்டும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டதே என பெண்கள் கவலைப்பட வேண்டாம். அவர்களுக்கு அரசு மீண்டும் இன்னொரு வாய்ப்பை கொடுக்கும்.