Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் எங்கு, எப்போது கிடைக்கும் என்பது குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Kalaignar Magalir Urimai Thogai Applications : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் எங்கு, எப்போது கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். முழுமையான விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முதல் விண்ணப்பம் வழங்கும் பணி ஜூலை 7 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாம் வரும் 15 ஆம் தேதி தொடங்கும். இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.
இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் நகர்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடைபெறும்.
இந்த திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் அனைவரின் வீட்டிற்கும் சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம், பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தகவல்களை வழங்கி கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் இந்த முகாம்களில் பங்கேற்று விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
இத்திட்டம் குறித்த விபரங்களை சரியாக பெற பொதுமக்களுக்கு "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணியானது நாளை முதல் தொடங்க உள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் (Ungaludan Stalin) என்கிற திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.