Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வரப்போகிறது? என்ற அப்டேட்டை பார்க்கலாம்
Kalaignar Magalir Urimai Thogai : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயர்வு குறித்த அறிவிப்பை எப்போது வெளியிடுவார்? என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டு பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பெறும் ஆயிரம் ரூபாய் விரைவில் உயரப்போகிறது. எப்போது? முதல் என்ற தகவல் இப்போது பார்க்கலாம்.
இந்தியாவிலேயே மிகச்சிறப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தும் மாநிலம் தமிழ்நாடு தான். அதிக பயனாளிகளை கொண்டிருக்கும் மாநிலமாகவும், இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் தவறாமல் ஆயிரம் ரூபாய் வழங்கி விடுகிறது.
வேறு எந்த மாநிலங்களிலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இத்தனை கோடி பெண்களுக்கு மாதம் உரிமைத்தொகை வழங்கப்படுவதில்லை. அதேநேரத்தில் இத்திட்டத்தில் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை உயர்த்தபடுமா? என்ற எதிர்பார்ப்பு பல மாதங்களாகவே பெண்கள் மத்தியில் இருக்கிறது.
சட்டப்பேரவை தேர்தல் வர இருப்பதால் அதற்கு முன்பாக ஏதேனும் முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிடுமா? என எதிர்பார்த்து காத்திருந்த பெண்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஒரு குட் நியூஸ் கொடுத்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை டிசம்பர் 12 ஆம் தேதி விரிவாக்கம் செய்து வைத்த அவர், விரைவில் இத்திட்டத்தில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உயரும் என்று கூறினார்.
ஆனால், எவ்வளவு உயரும்? எப்போது உயரும்? என்பதில் சஸ்பென்ஸ் வைத்தார். அவரின் இந்த சஸ்பென்ஸூக்கு பதிலளிக்கும் விதமாக அண்மையில் திண்டுக்கல்லில் பேசிய அமைச்சர் பெரியசாமி, பெண்களுக்கு நிச்சயம் ஒரு குட்நியூஸ் காத்திருக்கிறது என இப்போது தெரிவித்திருக்கிறார்.
அவரின் இந்த பேட்டிக்குப் பிறகு பெண்கள் மத்தியில் மகளிர் உரிமைத்தொகை உயரப்போகிறது என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளது. இப்போதைய சூழலில் அதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகவே தெரிகிறது.
ஜனவரி 20ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட உள்ளது. இதில் தமிழ்நாடு அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்த அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கலின்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படுவது குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அல்லது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்லது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரில் யாரேனும் ஒருவர் சட்டப்பேரவையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வாய்ப்புகள் இருக்கிறது.
எவ்வளவு உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது. சட்டப்பேரவை தேர்தல் வர இருப்பதால், இதில் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கில் திமுக இருக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு பெண்களின் வாக்குகளை கவருவதற்காக இந்த மிகப்பெரிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதேபோல், தேர்தலை குறி வைத்து இன்னும் சில கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்புகள் இருக்கிறது. அதிகபட்சம் இன்னும் 10 நாட்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படுவது குறித்த ஜாக்பாட் அறிவிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்துவிடும்.