கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : குவியும் விண்ணப்பங்கள் - உங்களுக்கு கிடைக்குமா?

Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி புதியதாக விண்ணபிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. யாருக்கு கிடைக்கும்?

Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) கோரி புதிதாக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், யாருடைய விண்ணப்பம் ஏற்கப்படும், யாருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

1 /10

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்துள்ளது. அதில் தகுதியான பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிச்சயம் கொடுக்கப்படும் என்பதையும் அடிக்கோடிட்டு கூறியுள்ளது. 

2 /10

இதனை கேட்ட பலரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து வருகின்றனர். குறிப்பாக புதியதாக ரேஷன் கார்டு வாங்கிய பலரும் உடனே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கின்றனர்.

3 /10

இதனால் நாள்தோறும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. கிட்டதட்ட 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

4 /10

இந்த எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மிக அருகாமையில் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா? என்றால் உறுதியாக இல்லை. பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. 

5 /10

அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்து, தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக நிர்ணயித்திருக்கும் வரைமுறைகள் அனைத்தும் பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே இந்த முறை இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.

6 /10

விண்ணப்பத்தில் அல்லது ஆவணங்களில் சிறிய தவறுகள் இருந்தால் கூட விண்ணப்பதாரரின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதுதவிர அதிகாரிகளின் கள ஆய்வில் ஆவணங்களின் உண்மைதன்மை சரிபார்ப்பின்போது பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது

7 /10

எனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்கள், அதற்கு முன்னதாக அரசு நிர்ணயித்திருக்கும் அனைத்து வரைமுறைகளும் உங்களுக்கு பொருந்துகிறதா?, அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறதா?, விண்ணப்பிக்கும்போது ஏதேனும் தவறு செய்துவிட்டீர்களா? என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். 

8 /10

எல்லா ஆவணங்களும் சரியாக இருந்து கடைசியில் வங்கி கணக்கு எண் தவறாக இருந்தால்கூட உங்களின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிலுவையில் வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே அரசின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக படித்து அல்லது கேட்டு தெரிந்து கொண்டு இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும்.

9 /10

இப்போது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மீண்டும் இந்த திட்டத்தில் சேருவதற்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். அதாவது சட்டப்பேரவை தேர்தல் முடிந்து மீண்டும் லோக்சபா தேர்தல் வரும் சமயத்தில் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் குறித்த அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறது

10 /10

இதனை மனதில் வைத்துக் கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகள் என்ன என்பதை படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். இல்லையென்றால் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தவறு செய்திருந்தால் அதனை மாற்ற வாய்ப்பில்லை. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பிறகு அல்லது அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது தவறுகளை விளக்கி அதற்குரிய ஆவணத்தை மீண்டும் கொடுத்தால் உங்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்பு இருக்கிறது.