மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் இவர்களுக்கு பணம் வராது..!

Published: Oct 07, 2025, 10:01 AM IST|Updated: Oct 07, 2025, 10:01 AM IST

Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் யாருக்கு பணம் வராது என தெரிந்து கொள்ளுங்கள்

Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் யாருக்கெல்லாம் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் பணம் வராது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

1/9

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் புதிதாக பெண்கள் பலரும் மனு அளித்து வருகின்றனர். நவம்பர் மாதம் வரை இந்த திட்டத்துக்கு மனு கொடுக்க முடியும்.

 

2/9

இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு சென்று மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப படிவத்தை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து கொடுக்கவும்.

3/9

அப்போது, கேட்கப்படும் தகவல்களை கவனமாக பூர்த்தி செய்யவும். நீங்கள் செய்யும் இரண்டு தவறு, ஒருவேளை உங்களின் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் பணம் வராமல் போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

 

4/9

கடந்த முறை இந்த தவறை பலரும் செய்திருந்தார்கள். அவை என்னவென்றால், சரியான மொபைல் எண் கொடுக்காமல் விடுவது, வங்கி கணக்கு எண்ணை தவறாக குறிப்பிடுவது ஆகும்.

 

5/9

வங்கி பாஸ்புக்கில் எண்ண மொபைல் எண் இருக்கிறதோ, அந்த மொபைல் எண் உங்கள் ஆதாரிலும் இருக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவத்திலும் அதே எண்ணை குறிப்பிடவும். 

 

6/9

ஏனென்றால் அந்த மொபைல் எண் மூலம் உங்களை எளிதாக அடையாளம் காண முடியும். மகளிர் உரிமைத்தொகை பணப்பரிவர்த்தனை குறித்த தகவலும் உங்களுக்கு உடனடியாக வந்து சேரும்.

 

7/9

தவறான மொபைல் எண் கொடுத்தால், உங்கள் அக்கவுண்டுக்கு பணம் வந்தாலும், அது தொடர்பான அறிவிப்பு செய்தி நீங்கள் கொடுத்த தவறான மொபைல் எண்ணுக்கு செல்லும்.

 

8/9

இதில் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல், இப்போது செயல்பாட்டில் இருக்கும் வங்கி எண்ணை கொடுக்கவும். அரசு மற்றும் தனியார் வங்கி என  எந்த வங்கிகளாக இருந்தாலும் பரவாயில்லை.

 

9/9

கடந்தமுறை இதில் செய்த தவறுகளால் பெண்கள் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொண்டு மீண்டும் அரசு அலுவலங்களுக்கு படி ஏறி இறங்க வேண்டியிருந்தது. அந்த தவறை மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிக்கும் நீங்கள் செய்யாதீர்கள்.