ஒரு குடும்பத்துக்கு ரூ. 8000! கலைஞர் மகளிர் உரிமைத்தொகை போல் முதலமைச்சரின் அடுத்த சர்ப்பிரைஸ்

Kalaignar Magalir Urimai Thogai : ஒரு குடும்பத்துக்கு 8 ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்த முக்கிய தகவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடுத்துள்ளார்.

Kalaignar Magalir Urimai Thogai : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு குடும்பத்துக்கு 8 ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து இன்று கொடுத்திருக்கும் அப்டேட்டை இங்கே விரிவாக பார்க்கலாம்.

 

1 /10

தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து சர்பிரைஸ்களை கொடுத்து வருகிறது. தமிழ்நாடே எதிர்பார்க்காத நேரத்தில் பிப்வரி, மார்ச் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai), மே மாதம் கோடைக்கால சிறப்பு ஊக்கத்தொகையாக 2000 ரூபாய் பிப்ரவரி மாதம் கொடுத்து அசத்தியது.

2 /10

இந்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை தமிழ்நாட்டு மக்களுக்கு, எதற்காக தங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வந்திருக்கிறது என தெரியவில்லை.   

3 /10

இதனையடுத்து பெண்கள் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று அடுத்த சர்ப்பிரைஸை கொடுத்துள்ளார் முதலமைச்சர்.   

4 /10

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாத, அரசின் மற்ற ஓய்வூதிய திட்டங்களில் பயனாளிகளாக இருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உதவித்தொகை விடுவிப்பு மற்றும் ஒரு லட்சத்து 63 ஆயிரம் குடும்பங்களுக்கு 8000 ரூபாய் வழங்குவது குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   

5 /10

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.  

6 /10

நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்.   

7 /10

இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.  

8 /10

அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  

9 /10

அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.  

10 /10

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம் என இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.