கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : பெண்களே குட் நியூஸ்! ரூ.1000 -க்கு மாதம் வட்டி பெறலாம் - தெரியுமா?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு (Kalaingar Magalir Urimai Thogai) கூட்டுறவுத்துறை, வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ் மூலம் சேமித்து மாதம் வட்டி பெறலாம்?. எப்படி என்பதை இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு (Kalaingar Magalir Urimai Thogai) கூட்டுறவுத்துறை, வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ் மூலம் சேமித்து மாதம் வட்டி பெறலாம்?. எப்படி என்பதை இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். 

1 /7

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டம் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. சுமார் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் பயனாளிகளாக இருக்கின்றனர். இவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கியில் நேரடியாக செலுத்தப்படுகிறது. 

2 /7

இந்த தொகைக்கு மாதம் வட்டி பெறலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். கூட்டுறவுத்துறை சார்பில் தமிழ் மகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரெக்கரிங் டெபாசிட் திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு 8 விழுக்காடு வரை வட்டி கொடுக்கப்படுகிறது. 

3 /7

அதனால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்கள் தங்கள் மாத தொகையை செலவழிக்காமல் அப்படியே தமிழ் மகள் திட்டத்தில் சேமிப்பது நல்லது. இந்த திட்டத்தில் மட்டும் சேமிக்க முடியுமா? என்றால் இல்லை. 

4 /7

பெண்கள் போஸ்ட் ஆபீஸ் மற்றும் வங்கிகளில் இருக்கும் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களையும் தேர்வு செய்யலாம். மாதாந்திர சேமிப்பு திட்டங்களுக்கு அதிக பலன்கள் மற்றும் வட்டி வருவாய் கொடுக்கப்படுகின்றன. இந்த திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்யலாம். அதன் மூலம் குறிப்பிட்ட காலத்தில் உங்களின் ஆயிரம் ரூபாய் தொகைக்கு இரட்டிப்பு வட்டியையும் பெற்றுவிட முடியும். 

5 /7

அதேபோல் பெண் குழந்தைகள் உங்கள் வீட்டில் இருந்தால், அவர்களின் பெயரில் கூட இந்த ஆயிரம் ரூபாயை செலவழிக்கலாம். அதாவது, அரசிடமிருந்து பெறும் ஆயிரம் ரூபாய் மாத தொகையை, செல்வ மகள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்களில் சேமிக்கலாம்.  

6 /7

இதன் மூலம் உங்களின் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுக்கப்படுகிறது. அத்துடன் அவர்களின் கல்வித் தேவைக்கு ஏற்ற நிதியும் வங்கியில் சேமிக்கப்படுகிறது. நீலகிரி போன்ற மலைப் பிரதேசங்களில் இந்த சேமிப்பு திட்டங்கள் ஊக்குவிக்கப்படுகிறது.

7 /7

எனவே தமிழ்நாட்டு பெண்கள் அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் தொகையை பயனுள்ள வகையில் சேமித்து, எதிர்கால நிதித் தேவையை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.