Kalaingar Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், மேல்முறையீடு எங்கு செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.
Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், மேல்முறையீடு எங்கு செய்ய வேண்டும் என்ற முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
1/12கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டம் ஜூன் 4 ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அன்றைய நாளில் தமிழ்நாடு முழுவதும் 9000 சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது.
2/12மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் நடக்கும் இந்த சிறப்பு முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பொதுமக்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காகவே நடத்தப்படுகிறது.
3/12இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்கள், ஏற்கனவே விண்ணப்பித்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் எல்லாம் இந்த முகாமில் கலந்து கொண்டு எளிதாக விண்ணப்பிக்கலாம்.
4/12ரேஷன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். ரேஷன் கார்டு இல்லாதவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. இதுதவிர ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், புகைப்படம், சிலிண்டர் ரசீது, மொபைல் எண், உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
5/12கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களையும் கட்டாயம் நிரப்ப வேண்டும். அவை உண்மையான தகவல்களாக இருக்க வேண்டும்.
6/12ஏனென்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் உண்மையா? என்பதை அதிகாரிகள் களத்தில் வந்து ஆய்வு செய்வார்கள்.
7/12அப்போது உண்மைக்கு மாறான தகவல்கள் இருந்தால் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். ஒருவேளை தவறாக உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதாவது, இந்த திட்டத்துக்கான எல்லா தகுதிகள் இருந்தபோதும் உங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் மேல்முறையீடு செய்யலாம்.
8/12விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் தாலுகா அலுவலகத்துக்கு நேரில் சென்று முறையிடலாம். அப்போது, அங்கிருக்கும் அதிகாரிகள் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு வழிகாட்டுவார்கள்.
9/12கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கு முன், இந்த திட்டத்துக்கான தகுதிகளை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வெப்சைட்டில் சென்று தவறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
10/12உங்களுக்கு எல்லா தகுதிகளிலும் இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும். மாறாக, தவறான தகவல்களை கொண்டு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது.
11/12வார்டு உறுப்பினரைத் தவிர மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர் முதல் எம்பி, எம்எல்ஏ, கவுன்சிலர், நகர்மன்ற தலைவர், மேயர் உள்ளிட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.
12/12அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. மத்திய மாநில அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. உயிர்கொல்லி நோய்வாய்பட்டவர்களுக்கு சிறப்பு விலக்கு உள்ளது. அதனை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வெப்சைட்டில் தெரிந்து கொள்ளுங்கள்.