திருமண தடை நீங்கும்.. கார்த்திகை மாதத்தில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ணுங்க

Written ByUmabarkavi K
Published: Nov 14, 2025, 05:28 PM IST|Updated: Nov 14, 2025, 05:33 PM IST

Karthigai Month: கார்த்திகை மாதத்தில் சில விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் திருமண தடைகள் நீங்கும். அது என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.

1/7

தமிழ் மாதங்களில் 8வது மாதமாக கார்த்திகை மாதம் வருகிறது. கார்த்திகை மாதம் ஆன்மீக ரீதியாக பெரிதும் முக்கியத்துவம் மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் சபரிமலைக்கு மாலையிடுவது, சிவபெருமான், முருகனை வழிபடுவது போன்றவை வழிபாடு செய்ய உகந்த மாதமாக கருதப்படுகிறது.

2/7

இப்படி பல சிறப்புகளை கொண்ட கார்த்திகை மாதத்தில் சில விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம், உங்கள் வீட்டில் இருக்கும் துன்பங்கள் நீங்கும் என சொல்லப்படுகிறது. மேலும், திருமண தடைகளும் நீங்கும் என ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. 

3/7

அந்த வகையில், 2025 கார்த்தி மாதம் நவம்பர் 17ஆம் தேதி பிறக்கிறது. நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை கார்த்திகை மாதம் உள்ளது. இந்த மாதத்தில் சில விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

4/7

கார்த்திகை மாதம் அன்று திருமண தடை நீங்கவும், வேலை வாய்ப்புகள் பெறவும், குழந்தை பாக்கியம் பெறவும், வீடு, வாகனம் வாங்குவதற்கும் தினந்தோறும் விளக்கேற்ற வேண்டும். குறிப்பாக, முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வீட்டில் வழிபட வேண்டும். அல்லது முருகர் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

5/7

மேலும், முருகன் சன்னதியில் 3 அகல்விளக்கு ஏற்றி, 9 முறை முருகனை சுற்றி வந்து பிராத்தனை செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது குழந்தை பாக்கியம் கிடைக்காதவர்களுக்கு நல்ல செய்தி வரும். அதே நேரத்தில், திருமணம் தடைகளும் நீங்கும். 

 

 

 

6/7

திருமண தடை நீங்க, ஆண்கள் 5 விளக்கேறிற் முருகப்பெருமானை வழிபட வேண்டும். பெண்கள் ஒரு விளக்கேற்றி முருகனை வழிபடுவதால் திருமண தடைகள் நீங்கும் என ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும், சிவபெருமானுக்கும் விளக்கேற்றினால் திருமணம் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதிகளும் சிவபெருமானை வழிபடலாம்.

7/7

இவ்வாறு காத்திகை மாதத்தில் வாரந்தோறும் செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். அதோடு, இல்லாமல் வீட்டிலும் கார்த்திகை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்து, முருகப் பெருமானை வழிபடலாம். (இந்த கட்டுறை ஆன்மீக அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. இதற்கு எந்தஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை. அதனால், இதற்கு ஜீ தமிழ் பொறுப்பேற்காது)