கரூரில் கொடூரம்; கண்ணீர்விட்டு அழுத அன்பில் மகேஷ் - உதவி எண்கள் அறிவிப்பு!

Written BySudharsan G
Published: Sep 28, 2025, 03:30 AM IST|Updated: Sep 28, 2025, 03:30 AM IST

Karur TVK Meeting Stampede: கரூரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் மொத்தம் 39 பேர் உயிரிழந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் கதறி அழுதார். 

கரூர் கூட்டநெரிசல்1/8

கரூர் கூட்டநெரிசல்

கரூரில் வேலுச்சாமிபுரத்தில் நேற்றிரவு நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். 

 

கரூர் கூட்டநெரிசல்2/8

கரூர் கூட்டநெரிசல்

உயிரிழந்தவர்களில் 5 சிறுவன்கள், 5 சிறுமிகள், 17 பெண்கள், 12 ஆண்கள் அடக்கம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் ஹேமலதா, மகள்கள் சாய் லசஷனா, சாய் ஜீவா ஆகிய மூவரும் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

கரூர் கூட்டநெரிசல்3/8

கரூர் கூட்டநெரிசல்

மொத்தம் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உடல்கள் அனைத்தும் அரசு மருத்துவமனைக்கு வெளியே வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட காட்சிகள் மனதை உலுக்கியுள்ளன.

 

கரூர் கூட்டநெரிசல்4/8

கரூர் கூட்டநெரிசல்

அடையாளம் காணப்பட்டவர்களின் உடல்கள் இன்று நள்ளிரவிலேயே உடற்கூராய்வு செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிவாரணமும் இன்றே வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் அதிகாலையில் கரூர் வர இருக்கிறார். 

 

கரூர் கூட்டநெரிசல்5/8

கரூர் கூட்டநெரிசல்

கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தரப்பிலும் முழு வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் மேற்கொள்ளப்பட்டன. 

 

கரூர் கூட்டநெரிசல்6/8

கரூர் கூட்டநெரிசல்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடியாக கரூர் விரைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அங்கு சிகிச்சையில் இருந்தோரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

 

கரூர் கூட்டநெரிசல்7/8

கரூர் கூட்டநெரிசல்

அன்பில் மகேஷ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வெளியே வரும்போது, கண்ணீர்விட்டு அழும் காட்சிகள் பெரும் சோகத்தை உண்டாக்கின. செந்தில்பாலாஜி உள்ளிட்ட அங்கிருந்த பலரும் தங்களின் துயரத்தை வெளிப்படுத்தினர். 

 

கரூர் கூட்டநெரிசல்8/8

கரூர் கூட்டநெரிசல்

கரூர் விஜய் நிகழ்வில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 04324 256306, 7010806322 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு உதவிகள் கோரலாம்.