ஓடிடியில் வெளியாகும் கவினின் கிஸ்... எப்போது தெரியுமா?

Written ByUmabarkavi K
Published: Oct 31, 2025, 02:55 PM IST|Updated: Oct 31, 2025, 02:55 PM IST

Kiss Movie OTT Release: கவின் நடித்த கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. கிஸ் திரைப்படம் எந்த ஓடிடியில், எப்போது வெளியாகிறது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

 

1/7

கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். பிக்பாஸ் நிக்ழ்ச்சிக்கு பிறகு,  தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.  டாடா, பிளடி பெக்கர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து,  அண்மையில் கிஸ் படத்திலும் கவின் நடித்திருந்தார்.

 

2/7

பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் தனது அறிமுக இயக்கமாக உருவாக்கியுள்ள  படம் கிஸ். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் விடிவி கணேஷ் ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

3/7

காதல், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த இந்த படம், ஒரு கமர்ஷியல் ரொமாண்டிக் என்டர்டெய்னர் ஆகும். இப்படம் திரையரங்குகளில்  2025 செப்டம்பர்  19ஆம் தேதி வெளியானது. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படமானது,  ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. 

 

4/7

தொடர்ந்து கிஸ் படத்துடைய ஓடிடி வெளியீட்டிற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. 

 

5/7

அதன்படி, ஜீ5 ஓடிடி தளத்தில் 2025 நவம்பர் 7ஆம் தேதி கிஸ் திரைப்படம்  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக வீடியோ ஒன்றையும் ஜீ5 ஓடிடி தளம் வெளியிட்டு இருந்தது. கவின் நடித்த ஸ்டார் படத்திற்கு வெளியான பிளடி பெக்கர் படம் கலவையான விமர்சனததை பெற்றாலும், வணிக ரீதியாக எந்த வசூலையும் குவிக்கவில்லை. 

 

6/7

அதே போல, கிஸ் படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், பாக்ஸ் ஆபில் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை. தற்போது, நடிகர் கவின் வெற்றிமாறன் தயாரிப்பாரில் மாஸ்க் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் 2025 நவம்பர் 21ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

7/7

முன்னதாக, தனுஷின் இட்லி கடை படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது. தொடர்ந்து,  கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா சாப்டர் 1 படம் 2025 அக்டோபர் 31ஆம் தேதியான இன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. தொடர்ந்து, அடுத்த வாரம் ஜீ5 ஓடிடி தளத்தில் கிஸ் படம் வெளியாக உள்ளது.