இந்த முக்கிய வீரரை கழட்டிவிட்ட காவ்யா மாறன்... தக்கவைத்த வீரர்கள் யார் யார் பாருங்க!

Written BySudharsan GUpdated bySudharsan G
Published: Jul 23, 2025, 04:46 PM IST|Updated: Jul 23, 2025, 04:51 PM IST

Kavya Maran: தென்னாப்பிரிக்காவின் SA20 லீக் தொடரில் தனது அணியின் கேப்டனையே காவ்யா மாறன் தற்போது அணியில் இருந்து விடுவித்துள்ளார்.

1/9

2026 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற இருக்கிறது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஐபிஎல் தொடருக்கு முன் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. 

 

2/9

அதற்கு முன், தென்னாப்பிரிக்காவில் SA20 லீக் தொடர் வரும் டிசம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறது. வரும் செப். 9ஆம் தேதி SA20 ஏலமும் நடைபெறுகிறது. இந்நிலையில், ஏலத்தை முன்னிட்டு SA20 தொடரின் 6 அணிகள் சில வீரர்களை தக்கவைத்திருக்கிறது, முக்கிய வீரர்களை விடுவித்திருக்கிறது. அந்த வகையில், 6 அணிகளும் அடுத்த சீசனுக்கு ஒப்பந்தம் செய்திருக்கும் வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.

 

3/9

1. எம்ஐ கேப் டவுன்: டிரென்ட் போல்ட், ரஷித் கான், ரியான் ரிக்கில்டன், ககிசோ ரபாடா, ஜார்ஜ் லிண்டே, கார்பின் போச் (தக்கவைப்பு). நிக்கோலஸ் பூரன் (ஏலத்திற்கு முன் ஒப்பந்தம்)

 

4/9

2. ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ்: பாப் டூ பிளெசிஸ், டோனோவன் பெரீரா (தக்கவைப்பு). ஜேம்ஸ் வின்ஸ், அகேல் ஹொசைன் (ஏலத்திற்கு முன் ஒப்பந்தம்)

 

5/9

3. பிரிட்டோரியா கேபிடல்ஸ்: ஆண்ட்ரே ரஸ்ஸல், வில் ஜாக்ஸ், ஷெர்பேன் ரூதர்போர்ட் (ஏலத்திற்கு முன் ஒப்பந்தம்)

 

6/9

4. பார்ல் ராயல்ஸ்: லுவான்-ட்ரே-பிரிட்டோரியஸ், டேவிட் மில்லர், பிஜோர்ன் ஃபோர்டுயின் (தக்கவைப்பு). சிக்கந்தர் ராசா, முஜீப்-உர்-ரஹ்மான் (ஏலத்திற்கு முன் ஒப்பந்தம்)

 

7/9

5. டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்: சுனில் நரைன், ஜோஸ் பட்லர் (ஏலத்திற்கு முன் ஒப்பந்தம்). நூர் அகமது (தக்கவைப்பு), ஹென்ரிச் கிளாசென் (வைல்ட் கார்ட்)

 

8/9

6. சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்: ஜானி பேர்ஸ்டோவ், அல்லாஹ் கசான்ஃபர், ஆடம் மில்னே (ஏலத்திற்கு முன் ஒப்பந்தம்). டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (ஒப்பந்தம்), மார்கோ யான்சன் (வைல்ட் கார்ட்)

 

9/9

கடந்த சீசன்களில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட எய்டன் மார்க்ரம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இதில் முதலிரண்டு சீசன்களில் அவர் கோப்பையை வென்று கொடுத்தார், கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை அணியை கொண்டுவந்தார். இருப்பினும், ஐபிஎல் தொடரில் எஸ்ஆர்ஹெச் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதை போன்று, SA20 தொடரில் இருந்து காவ்யா மாறன் இவரை விடுவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.