நடிகை TJ. பானுவால் இணைந்த இந்தியா இலங்கை! வைரல் புகைப்படம்!

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானு நடிக்கும் புதிய திரைப்படமான அந்தோனி பூஜையுடன் இலங்கையில் தொடங்கி உள்ளது.

1 /6

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த T.J.பானு நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பு, பூஜையுடன் இலங்கையில் ஆரம்பமாகியது.

2 /6

ஓசை பிலிம்சின் கலை வளரி சக இரமணா - சுகா , விஜய் பாலசிங்கம் பிலிம்சின் விஜய் சங்கர், டிரீம் லைன் புரடக்‌ஷன்சின் சிரீஸ்கந்தராஜா மற்றும் கனா புரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

3 /6

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெறயிருக்கும் இப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு நண்பர்கள் இணைந்து இயக்குகின்றனர்.

4 /6

இத்திரைப்படத்தை கயல் வின்சன்ட் மற்றும் T.J பானுவுடன் சேர்ந்து இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், செளமி போன்றோரும் தமிழகத்திலிருந்து அருள்தாஸ் போன்ற நடிகர்கள் என இரு நாட்டினரும் சேர்ந்து நடிக்கிறார்கள்.

5 /6

இத்திரைப்படத்தை “மணல்” என்கிற திரைப்படத்தினூடாக சர்வதேச விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்ய, அண்மையில் வெற்றி பெற்ற “சித்தா” திரைப்படத்தின் படத்தொகுப்பாளரான சுரேஷ் A. பிரசாத் படத்தொகுப்பு செய்ய கலை இயக்குனராக கலா மோகனும் பணியாற்றுகின்றனர்.  

6 /6

இத்திரைப்படமானது இலங்கை இந்திய நாட்டு கலைஞர்களின் கூட்டுமுயற்சியினால் உருவாகிறது என்பது சிறப்பம்சமாகும். அதோடு இப்படம் ஈழத்தின் கடற்புறத்துக் வாழ்வியல் கதையாக உருவாக்கப்படுகின்றது என திரைப்படக்குழு அறிவித்தருகின்றனர்.