சேதமடைந்த கல்லீரலுக்கும் உயிர் கொடுக்கலாம்.... நீங்கள் சாப்பிட வேண்டியதும்... தவிர்க்க வேண்டியதும்

உடல் உழைப்பே இல்லாத இன்றைய நவீன வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் ஆகியவை காரணமாக, கொழுப்பு கல்லீரல்  உள்ளிட்ட கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து விட்டது.

நமது உடலின் ஒரு முக்கிய உறுப்பான கல்லீரலின் வேலை நமது உணவை ஜீரணித்து உடலை சுத்தம் செய்வதாகும். இந்நிலையில் கல்லீரலின் ஆரோக்கியதை மேம்படுத்த உதவும் பயனுள்ள வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

1 /9

உடலை சுத்தம் செய்யும் ஃபேக்ட்ரியாக வேலை செய்யும் கல்லீரலுக்கு, தன்னை சீர் செய்து கொள்ளும் திறன் உண்டு.  உடலில் சேரும் நச்சுக்களை வடிகட்டுவதோடு மட்டுமல்லாமல்,  உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடலில் சேர்ப்பது,வளர்சிதை மாற்றம் போன்ற பல முக்கிய வேலைகளை செய்கிறது.

2 /9

ஆரோக்கியமற்ற உணவு மற்றும் மது பானங்கள் நமது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.  கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடலில் நச்சுக்கள் சேர்வதோடு, செரிமானம் பாதிப்பதால், உடல் பலவீனம் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்பட்டு, உடலில் தொற்று நோய் ஏற்படும் அபாயங்களும் அதிகரிக்கின்றன.

3 /9

கல்லீரலில் சேரும் நச்சுக்களை, டீடாக்ஸ் செய்வது அவசியம். இதற்கு உதவும் உணவு பொருளில் முதலிடம் வகிப்பது நெல்லிக்காய். இதில் உள்ள வைட்டமின் சி, ஆன்ட்டி பாக்டீரியல், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைக்கிறது. தினம் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவது பலன் தரும்.

4 /9

மஞ்சள் கல்லீரலுக்கு ஒரு சூப்பர்ஃபுட். இது கல்லீரலை அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. தினமும் 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் கலந்து குடிக்க வேண்டும்.

5 /9

கல்லீரலை சுத்தம் செய்ய கொத்தமல்லி  மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். இதில் உள்ள ஃபோலிக் அமிலம்  மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

6 /9

கீரை வகைகளில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இது கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்குவதோடு, இரத்த சோகையை போக்க உதவுகிறது. இதனால், சோர்வு பலவீனம் நீங்கி, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

7 /9

வாழ்க்கையில், நேரத்தை மிச்சப்படுத்த பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடி டு ஈட் உணவு வகைகள் கல்லீரலுக்கு பெரும் ஆபத்தை கொண்டு வந்து சேர்க்கும். எனவே வீட்டில் சமைத்த உணவுகளை உண்பதே சிறப்பு.

8 /9

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, நீங்கள் சில விஷயங்களை முழுமையாக கைவிடுவது முக்கியம். உதாரணமாக, ஆல்கஹால் மற்றும் காஃபின் போன்ற பானங்கள், அதிக இனிப்பு கொண்ட உணவுகள் ஆகியவை உங்கள் கல்லீரலை சேதப்படுத்தும். எனவே அவற்றில் இருந்து முக்கியமாக விலகி இருக்கவும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.