This Week Ott Release: இந்த வாரம் தண்டல் உள்ளிட்ட படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி வெளியான படங்கள் சில வாரங்கள் கழித்து ஓடிடி தளங்களில் வெளியாவது வழக்கம். சில படங்கள் அல்லது வெப் சீரியஸ் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவதும் உண்டு. அந்த வகையில், ஓடிடி தளத்தில் வெளியாகும் சில படங்கள் குறித்து இங்கு பார்க்கப்போகிறோம்.
நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தண்டேல். இப்படத்தில் சாய் பல்லவி, பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், ஆடுகளம் நரேன், கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கார்த்திகேயா 2 படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கி உள்ளார். மீனவர்களின் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இந்நிலையில், இப்படம் நாளை (மார்ச் 07) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
ஆசிப் அலி மற்றும் அனஸ்வரா நடிப்பில் உருவாகி உள்ள படம் ரேகா சித்திரம். இப்படத்தை ஜோபின் டி சாக்கோ இயக்கி உள்ளார். திரில்லர் படமான ரேகா சித்திரம் நாளை (மார்ச் 07) சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
மணிகண்டன், சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் குடும்பஸ்தன். திரையரங்குகளில் வெளியாகி ஹிட்டான இப்படம் நாளை (மார்ச் 07) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
யோகி பாபு வெளியான திரைப்படம் குழந்தைகள் முன்னேற்ற கழகம். சகுனி படத்தை இயக்கிய ஷங்கர் தயாள் இப்படத்தை இயக்கி உள்ளார். குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து, அரசியல் காமெடி கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் நாளை (மார்ச் 07) ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
சார்லி நடிப்பில் வெளியான திரைப்படம் பைண்டர். இப்படத்தில் நிழல்கள் ரவி, செண்ட்ராயன், தாரணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வினோத் ராஜேந்திரன் இயக்கி உள்ளார். இப்படம் நாளை (மார்ச் 07) ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.