சுக்கிரன் பெயர்ச்சி: ஆடம்பர சுக போக வாழ்வைத் தரும் சுக்கிரன் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆவதால், புதன் சுக்கிரன் இருவரும் இணைகிறார்கள். இதனால் லட்சுமி நாராயண யோகம் உருவாகும். இது அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும் யோகமாக கருதப்படுகிறது.
கிரக பெயர்ச்சிகள் மட்டுமல்ல, கிரகங்களின் பெயர்ச்சிகளால் ஏற்படும் இணைவுகளும், வாசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடக ராசியில் புதனும் சுக்கிரனும் இணைவதால் பலன் பெறும் ராசிகளை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
1/8லட்சுமி நாராயண ராஜயோகம்: ஜோதிட சாஸ்திரத்தில் கிரக பெயர்ச்சிகள் மட்டுமல்ல, அதனால் ஏற்படும் இணைவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக, புதனும் சுக்கிரனும் கடகத்தில் இணைகிறார்கள்.
2/8சுக்கிரன் பெயர்ச்சி: வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி, ஆடம்பர வாழ்வை அளிக்கும் சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதற்கு முன்னதாக ஆகஸ்ட் பதினொன்றாம் தேதி ஞான காரகரான புதன் கடக ராசிக்கு செல்கிறார். இதனால், உருவாகும் லட்சுமி நாராயண ராஜ யோகம் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும்.
3/8மேஷ ராசி: விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் இணக்கம் உண்டாகும். நிதி நிலையை வலுவாக்க நல்ல வாய்ப்புகளை பெறலாம். நிலம் அல்லது வாகனம் வாங்கும் இருக்கும் உண்டாகும்.
4/8கடக ராசி: அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இலக்கியம் மற்றும் கலை துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்ல நேரம் இது.
5/8கன்னி ராசி: வேலையில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். செல்வ செழிப்பு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.
6/8விருச்சிக ராசி: பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. இதனால் ஆதாயமும் கிடைக்கும். செல்வாக்கு மிக்க நபர் மூலம் காரியங்களை எளிதாக முடிப்பீர்கள். ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.
7/8மகர ராசி: இது நாள் வரை சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும். வருமான ஆதாரம் பெருகும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும்.
8/8பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.