Raghuvaran Son Sai Rishivaran Photos : மறைந்த நடிகர் ரகுவரனின் பிறந்தநாள் இன்று; இதையொட்டி, அவரது குடும்ப புகைப்படங்களும் மகனின் போட்டோவும் வைரல் ஆகி வருகிறது.
Raghuvaran Son Sai Rishivaran Photos : தமிழ் திரையுலகில், முக்கிய வில்லன் நடிகராக இருந்தவர் ரகுவரன். இவர், 2008ஆம் ஆண்டில் மாரடைப்பு மூலம் உயிரிழந்தார். இவரது பல்வேறு கதாப்பாத்திரங்கள் இன்றுவரை மக்களுக்கு நினைவில் நிற்கும் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக, பாட்ஷா, அருணாச்சலம் என இவர் ரஜினிக்கு வில்லனாக நடித்த படங்கள் மட்டும் ஏராளம். இவரும், நடிகை ரோகிணியும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இன்று ரகுவரனின் பிறந்தநாளையொட்டி, அவர் மகனின் புகைப்படமானது வைரலாகி வருகிறது.
தமிழில் எத்தனை வில்லன் நடிகர்கள் வந்தாலும் நிரப்ப முடியாத இடத்தை விட்டுவிட்டு சென்றவர், ரகுவரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கும் இவர், ஏழாவது மனிதன் என்கிற படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார்.
ரகுவரன் இதுவரை, ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் பல படங்களில் நடித்துள்ளார். அப்படி அவர் நடித்திருக்கும் படங்கள் பெரிய ஹிட் அடித்துள்ளன. குறிப்பாக ‘புரியாத புதிர்’ படத்தில் வில்லனாக நடித்த போது இவர் கூறிய "I know..I know.." என்கிற டைலாக், இவரது அடையாளமாக மாறியது.
தமிழ் சினிமாவை பொருத்தவரை, வில்லன் என்றால் கண்ணத்தில் மரு, கழுத்தில் கர்சிஃப், தோற்றத்தில் முரடனாக இருக்க வேண்டும் என்கிற பிம்பம் இருந்தது. அதனை உடைத்தவர் ரகுவரன்தான். ஹீரோ மட்டும் ஸ்டைலாக இருக்க வேண்டியதில்லை, வில்லனும் ஸ்டைலாக இருக்கலாம் என்பதற்கும் ட்ரெண்ட் செட்டராக இருந்தவரும் ரகுவரன்தான்.
கடைசியாக, 2008ஆம் ஆண்டில் தனுஷிற்கு தந்தையாக ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நடித்த ரகுவரன், அதன் பிறகு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது கடைசி படம் என்பதாலோ என்னவோ, அந்த படத்திலும் அவரது கதாப்பாத்திரம் இறந்தது போன்ற காட்சிகள்தான் இடம் பெற்றிருக்கும். இவர் உயிரிழந்து, இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும், இவர் தமிழ் சினிமாவில் விட்டுச்சென்ற இடம் இன்னும் வெற்றிடமாகத்தான் இருக்கிறது.
ரகுவரன், நடிகை ரோகிணியை 1996ல் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு, சாய் ரிஷிவரன் என்கிற மகன் இருக்கிறார். 8 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, ரகுவரனும் ரோகிணியும் விவாகரத்து பெற்றனர்.
ரகுவரன் - ரோகிணியின் தம்பதியின் மகனான சாய் ரிஷிவரன், தந்தையின் இறப்பிற்கு பின்பு தனது தாயிடம் வளர்ந்தார். இவருக்கு இப்போது 25 வயது ஆகிறது. ரகுவரனின் பிறந்தநாளையொட்டி அவரது மகனின் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாய் ரிஷிவரனின் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், இவர் பார்க்க அப்படியே அவரது தந்தை போல இருப்பதாக கூறி வருகின்றனர். இவர் தனது தந்தை-தாய் போல சினிமாவிற்குள் வருவாரா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.