மறைந்த போப் பிரான்சிஸின் ஒரு மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இன்று (ஏப்ரல் 21) காலமானார். 

போப் பெண்டிகட் XVI பதவி விலகிய பின்னர், 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த கார்டினல் ஹோர்ஹே மரியோ பர்கோலியோ எனும் இயற்பெயரை கொண்ட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1 /5

88 வயதான போப் பிரான்சிஸ் இன்று (ஏப்ரல் 21) திடீரென காலமானார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாடிகன் சிட்டி வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸின் மறைவிற்கு உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

2 /5

போப் பிரான்சிஸ் கடந்த 2013ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பொறுப்பேற்றார். இவர் ஒரு சாதாரண எளிமையான வாழ்க்கையை வரும்பக்கூடியவர். 

3 /5

பெரிய பதவியில் இருந்தபோதிலும் அவர் தேவாலையத்தில் இருந்து எந்த ஊதியத்தையும் ஏற்க விரும்பவில்லை. அவரது மாத சம்பளம் 32000 அமெரிக்க டாலர் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் மாதம் 27 லட்சம் ரூபாய் ஆகும். 

4 /5

இருப்பினும், போப் பிரான்சிஸ் தனக்கு சம்பளம் வேண்டாம் என மறுத்துவிடார். பதிலாக அவரது சம்பளத்தை தேவாலயங்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் நன்கொடையாக வழங்கினார்.   

5 /5

போப்பாக பதவியேற்பதற்கு முன்பாகவே கார்டினல் உள்ளிட்ட பெரிய பதவிகளை வகித்துள்ளார். அப்போதும் தனக்கு சம்பளம் வேண்டாம் என மறுத்துள்ளாராம். தனக்கென எந்த ஒரு ஆடம்பர செலவையும் செய்ய விரும்பாத ஒரு எளிய மனிதரை தற்போது இந்த உலகம் இழந்திருக்கிறது.