மனோஜ் பாரதிராஜாவின் அதே சாயலில் அவரது மகள்கள்! வைரலாகும் குடும்ப போட்டோக்கள்..

Late Actor Manoj Bharathiraja Family Photos : நடிகரும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ், சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில், அவர் தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Late Actor Manoj Bharathiraja Family Photos : பிரபல தமிழ் நடிகரும், இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ், சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த இழப்பு, தமிழ் திரையுலகினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது இறுதி சடங்கு குறித்த வீடியோக்கள், போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வந்தன. இதில் பலரது மனங்களையும் உடைத்த ஒரு விஷயம், மனோஜ்ஜின் இரண்டு செல்ல மகள்கள் தங்களது தந்தைக்கு இறுதி சடங்குகளை செய்ததுதான். தற்போது இவர்களின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

1 /7

பாரதிராஜாவின் மகனான மனோஜ், 1999ல் வெளியான தாஜ் மகால் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார். இந்த படத்தை அவரது தந்தையே இயக்கியிருந்தார். 

2 /7

மனோஜ், நடிகர் மட்டுமல்ல நல்ல பாடகரும் கூட. இவர், தான் நடித்த படங்களில் சில பாடல்களை தானே எழுதி பாடியுமிருக்கிறார்.

3 /7

மனோஜ், 2006ஆம் ஆண்டு தனது பல நாள் காதலியும்-நடிகையுமான நந்தனாவை மணந்தார். இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.

4 /7

மனோஜ்-நந்தனா தம்பதிக்கு அர்த்திகா மற்று மதிவதனி என இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இருவரும் தற்போது பள்ளியில் படித்து வருகின்றனர்.

5 /7

நடிகர் மனோஜ் பிரபல தனியார் மருத்துவமனையில் 1 மாதத்திற்கு முன்னர் இருதய அறுவை சிகிச்சை செய்து முடித்திருந்தார். மருத்துவர்கள், வீட்டில் ஓய்வெடுக்க சொன்னதை அடுத்து, இவர் வீட்டில் ரெஸ்ட் எடுத்து வந்தார்.

6 /7

கடந்த சில நாட்களாகவே, மனோஜ் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த மார்ச் 25ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு வயது, 48தான். 

7 /7

மனோஜ்ஜின் இறப்பை அடுத்து அவர் குறித்து விஷயங்களும், அவரது குடும்ப புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இவரது இரு மகள்களான மதிவதனி மற்றும் அர்த்திகாவின் புகைப்படங்களை பார்த்த சிலர் இவர் பார்ப்பதற்கு அப்படியே அவரது தந்தை போல இருப்பதாக கூறி வருகின்றனர்.