Dhanush To Pair With Famous Malayalam Actress : தமிழ் திரையுலகின் டாப் நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர் தனுஷ். இவர் புதிதாக நடிக்க இருக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கும் நடிகை குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
Dhanush To Pair With Famous Malayalam Actress : கோலிவுட்டில் டாப் நடிகராக விளங்கி வருபவர், தனுஷ். இவர், நடிகராக மட்டுமன்றி இயக்குநராகவும் விளங்கி வருகிறார். இன்னும் 2 ஆண்டுகளுக்கு தனது கால்ஷீட்டை பிசியாக வைத்திருக்கும் இவர், தற்போது புதிதாக ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக அவரை விட 18 வயது குறைந்த நடிகை ஒருவர் நடிக்கிறார். அவர் யார் தெரியுமா?
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து, பிசியாக பல படங்களில் நடித்தும் வருகிறார்.
தனுஷ், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருவதையொட்டி அவர் சமீபத்தில் ஒரு இளம் இயக்குநரின் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர், தனுஷை விட 18 வயது இளையவர்.
போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா, தனுஷின் இந்த புது திரைப்படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது.
இப்போது இளசுகள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நாயகி இவர்தான். பிரேமலு திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், தற்போது தமிழிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
விஜய்யுடன் ஜன நாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கு முன்னர், பென்சில் படத்தில் நடித்திருந்தார்.
மமிதா, தனுஷுடன் இணைந்து நடிக்க இருப்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.