தனுஷுக்கு முதன் முறையாக ஜோடியாகும் பிரபல நடிகை! இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கு..

Written ByYuvashree
Published: Nov 03, 2025, 10:34 AM IST|Updated: Nov 03, 2025, 10:34 AM IST

Pooja Hegde Dhanush 55th Film : தமிழ் திரையுலகின் டாப் நடிகரான தனுஷ், தனது 55வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.

Pooja Hegde Dhanush 55th Film : இந்திய திரையுலகின் கவனிக்கத்தக்க நடிகராக மாறிவிட்டார், தனுஷ். இவர், தனது 55வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது குறித்த விவரம், தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவல், இதோ.

Dhanush1/7

தனுஷ்

தமிழ் திரையுலகில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக திறமைமிகு நடிகராகவும், பன்முக கலைஞராகவும் இருப்பவர் தனுஷ். அடுத்த வருடம் வரை நேரமில்லாத அளவிற்கு பல படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.

Bollywood2/7

பாலிவுட்

ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டிற்கு சென்ற தனுஷ். அங்கு ஏற்கனவே இரண்டு ஹிட் படங்களை கொடுத்து விட்டார். இப்போது கிருத்தி சனோனுடன் சேர்ந்து நடித்திருக்கும் தேரே இஷ்க் மெயின் திரைப்படம் ரிலீஸிற்கு ரெடியாக இருக்கிறது. 

Rajkumar Periasamy3/7

ராஜ்குமார் பெரியசாமி

தனுஷ், தமிழில் ‘அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.

55th Film4/7

55வது படம்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம், தனுஷின் 55வது படமாகும். இதை சுற்றி ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

சாய் அபயங்கர்5/7

Sai Abhyankkar

தனுஷின் இந்த படத்திற்கு, புது சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பதாக கூறப்படுகிறது. கூடவே, நாயகி யார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

Pooja Hegde6/7

பூஜா ஹெக்டே

அவர் வேறு யாருமில்லை, பூஜா ஹெக்டேதான். தமிழில் முகமூடி படம் மூலம் அறிமுகமான இவர், பின்பு பீஸ்ட், ரெட்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது விஜய்யின் ஜனநாயகன் படத்திலும் நடித்துள்ளார். 

Not Official Yet7/7

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை

தனுஷின் 55வது படத்தில் பூஜா ஹெக்டே இணைவது குறித்த தகவல், இன்னும் அதிகாரப்பூர்வம் ஆக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.