Pushpa 2 The Rule Box Office Collection Day 3 : அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம், சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
Pushpa 2 The Rule Box Office Collection Day 3 : பான்-இந்திய அளவில் வெளியாகியிருக்கும் படம், புஷ்பா 2 தி ரூல். இந்த படதில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில், மலையாள நடிகர் பகத் பாசில் நடித்திருக்கிறார். இந்த படம், வெளியான 3 நாட்களிலேயே பல கோடிகளை அள்ளி இருக்கிறது. இதன் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
2021ஆம் ஆண்டில் வெளியான புஷ்பா படத்தின் தொடர்ச்சியாக, புஷ்பா 2 படம், கடந்த 5ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில், அல்லு அர்ஜுன் சந்தன மரக்கடத்தல் டான் ஆக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார்.
புஷ்பா 2 படம் தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இதுவரை, பாகுபலி, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்கள் செய்த ப்ரீ புக்கிங் சாதனையை, புஷ்பா 2 படம் முறியடித்திருக்கிறது.
புஷ்பா 2 படத்திற்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முதல் நாளிலேயே சுமார் ரு.175 கோடியை வசூல் செய்த இந்த திரைப்படம், இரண்டாம் நாளில், ரூ.499 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது.
புஷ்பா 2 படத்தில் பக்த பாசிலின் வில்லத்தனமான நடிப்பு குறித்தும் பலர் பேசி வருகின்றனர். இதே போல தொடர்ந்து அவருக்கு தெலுங்கில் பல்வேறு பட வாய்ப்புகள் வரும் என கூறப்படுகிறது.
புஷ்பா 2 படம், இந்தியாவை தாண்டி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிலும் நன்றாக வசூல் செய்து வருகிறது.
புஷ்பா 2 படம், 3 நாட்களில், 500-ஐ தாண்டலாம் என கூறப்படுகிறது.
இரண்டு நாட்களும் வார இறுதி நாட்கள் என்பதால், இந்த வசூல் இன்று ரூ.500 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கபடுகிறது.