புஷ்பா 2: அம்மாடியோவ்! 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா..? எவ்வளவு தெரியுமா?
தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கும் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் படம், புஷ்பா 2: தி ரூல். இந்த படத்தை சுகுமார் இயக்கியிருக்கிறார். இந்த படம், இந்திய சினிமாவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
புஷ்பா படத்தின் முதல் பாகமான, புஷ்பா 1: தி ரைஸ் திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியாகி பெரிய ஹிட் அடித்தது. அது மட்டுமன்றி இதில் இடம் பெற்றிருந்த பாடல்களும் பெரிய ஹிட் அடித்தன.
புஷ்பா 1 படம் நன்றாக இருந்ததால், அதற்கு அடுத்த பாகமான புஷ்பா 2 படம் மீது ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து, இப்படம், இந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது.
புஷ்பா 2 படம், ஆந்திரா, தெலங்கானா மட்டுமன்றி, தமிழ் நாடு, கேரளா, வட இந்தியாவின் பல இடங்கள் என பட்டித்தொட்டியெங்கும் பட்டையகிளப்பி வருகிறது.
இரண்டு நாட்களிலேயே கிட்டத்தட்ட 200 கோடியை தாண்டி வசூலித்த புஷ்பா 2 திரைப்படம், தற்போது 1000 கோடியை தொட இருக்கிறது.
பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் இந்த படம், ரிலீஸான 5 நாட்களுக்குள்ளாகவே 922 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
6ஆம் நாளான இன்று, புஷ்பா 2 : தி ரூல் படம் 1000 கோடியை தாண்டி விடும் என அடித்து கூறப்படுகிறது. இதுவரை இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அமீர் கான், சல்மான் கான் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படங்கள் கூட, இவ்வளவு அதிவேகமாக 1000 கோடியை வசூலித்ததில்லை.