ஜன நாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்! யார் தெரியுமா?

Famous Rapper Hanumankind Joins Jana Nayagan : ஹெச். வினோத் நடிப்பில் உருவாகி வரும் படம், ஜன நாயகன். விஜய் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் உலகப்புகழ் பெற்ற பிரபலம் ஒருவர் இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?

Famous Rapper Hanumankind Joins Jana Nayagan : டாப் நடிகராக விளங்கும் விஜய்யின் கடைசி படமாக உருவாகி வருகிறது, ஜன நாயகன். இந்த படத்திற்கு பிறகு, விஜய் முழு நேரமாக அரசியலில் ஈடுபட இருக்கிறார். இதற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், இதில் உலகப்புகழ் பெற்ற ஒரு பிரபலமும் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் யார் தெரியுமா? இங்கு பார்ப்போம். 

1 /7

அரசியல்-ஆக்‌ஷன் கதைக்களத்தை கொண்ட படமாக உருவாகி வருகிறது, ஜன நாயகன். இது, விஜய்க்கு 69வது மற்றும் கடைசி படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது, தற்போது கொடைக்கானலில் நடந்து வருகிறது. 

2 /7

ஜன நாயகன் படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இது, விஜய்யுடன் அவர் இணையும் 2வது படமாகும். இதற்கு முன்னர் பீஸ்ட் திரைப்படத்தில் இவர்கள் ஒன்று சேர்ந்து நடித்திருக்கின்றனர். மீண்டும், இந்த ஜோடியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

3 /7

ஹெச்.வினோத், ஜன நாயகன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் கண்டிப்பாக விஜய் ரசிகர்ளுக்கு மட்டுமன்றி, சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

4 /7

ஜன நாயகன் படத்தில் புதிதாக ஒரு பாடகரும் இணைந்திருக்கிறார். இவரது பெயர், ஹனுமான்கைண்ட் (Hanumankind). கேரளாவை சேர்ந்த இவர், நைஜீரியா, சவுதி அரேபியா, துபாய், எகிப்து, கதார், இத்தாலி என பல்வேறு இடங்களில் வளர்ந்திருக்கிறார். கடைசியாக, அமெரிக்காவில் இவரது குடும்பம் செட்டில் ஆனது. அங்கு படித்த இவர், மீண்டும் இந்தியாவில் இருக்கும் கோயம்புத்தூரில் ஒரு தனியார் பள்ளியில் பயின்றார்.

5 /7

ராப் பாடல் பாடுவது, பாடல்கள் எழுவது, நடிப்பது என்று பல திறமை வாய்ந்தவராக இருக்கிற்றார் ஹனுமான்கைண்ட். இவரது பிக் டாக்ஸ் (Big Dawgs) பாடல், உலகளவில் பெரிய ஹிட் அடித்தது. 

6 /7

ஜன நாயகன் படத்தில் அனிருத் இசையில் ஹனுமான்கைண்ட் ஒரு பாடல் பாட இருப்பதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால், சில நாட்களுக்கு முன்புவரை அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது.

7 /7

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருக்கும் ஹனுமான்கைண்ட், விஜய்க்காக ஜன நாயகன் படத்தில் செம ராப் பாடல் ஒன்றை தான் பாடியிருப்பதாக அவரே அதில் கூறியிருக்கிறார். இது போல இன்னும் நிறைய ப்ராஜெக்ட்க்காக சென்னைக்கு வருவேன் என்றும் கூறியிருக்கிறார்.