Hero Of Ravi Mohan First Directorial Film : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம வரும் ரவி மோகன் (முன்னாள் ஜெயம் ரவி), முதன்முதலாக ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அதில் ஹீரோவாக நடிக்க இருப்பவர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
Hero Of Ravi Mohan First Directorial Film : நடிகர்கள் இயக்குநர்கள் ஆவதும், இயக்குநர்கள் நடிகர்களாவதும் தமிழ் சினிமாவில் வாடிக்கையாகி விட்டது. தற்போது அந்த லிஸ்டில் புதிதாக இணைந்திருக்கிறார் ரவி மோகன். சமீபத்தில் ‘ஜெயம் ரவி’ என்றிருந்த தனது பெயரை மாற்றிக்கொண்ட அவர், தனது மனைவியை விட்டு பிரிந்ததில் இருந்து புதுவிதமான பல முடிவுகளை எடுத்து வருகிறார். ரவி மோகன், தற்போது சில படங்களில் நடிப்பதற்காக கமிட் ஆகியிருக்கும் நிலையில், ஒரு பிரபல நடிகரை வைத்து முதன்முறையாக ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தையும், அவரது முதல் படத்தில் நடிக்க இருக்கும் ஹீரோ குறித்தும் இங்கு பார்ப்போம்.
ஜெயம் படம் மூலம், காலேஜ் பையனாக அறிமுகமாகி பின்பு உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட படங்கள் மூலம் சாக்லேட் பாயாக மாறியவர், ரவி மோகன்.
ஜெயம் ரவி என்று தன்னை யாரும் அழைக்க வேண்டாம் என சில மாதங்களுகு முன்பு கோரிக்கை வைத்த இவர், இனி அனைவரும் தன்னை ரவி மோகன் என அழைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், ரசிகர்களால் இன்னும் இவர் “ஜெயம் ரவி” என்பதை மறக்க முடியவில்லை.
தனது 20 வருடங்களுக்கும் மேற்பட்ட திரை வாழ்க்கையில் வெகு சில ஹிட் படங்களே கொடுத்திருந்தாலும், அவை நின்று பேசும் அளவிற்கான ஹீரோவாக இருப்பவர், ரவி மோகன். இவருக்கு தற்போது படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசையும் வந்திருக்கிறது.
காமெடி நடிகர் யோகி பாபு, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில், ரவி மோகனை தனது நெருங்கிய நண்பர் என்று குறிப்பிட்டார். மேலும், ரவி இயக்குநராக மாற இருப்பதாகவும், அவர் இயக்கும் முதல் படத்தில் நான்தான் ஹீரோ என்றும் கூறினார்.
39 வயதாகும் யோகி பாபு, ரவி மோகனுடன் ஏற்கனவே கோமாளி படத்தில் அவருக்கு நண்பராக நடித்திருந்தார். திரைக்கு பின்னாலும் இவர்களின் நட்பு வலுவாக தொடர்வதால், இவர்கள் இந்த படத்தில் இணைவது உறுதி என்றே சில ரசிகர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ரவி மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த பிரதர், காதலிக்க நேரமில்லை ஆகிய இரு படங்களும் தோல்வியை தழுவின. இதையடுத்து இவர் தற்போது பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.