நயன்தாராவுக்கு ஜோடியாக வேண்டியவர்! இப்போ அவருக்கு வில்லனாக நடிக்கிறார்..யார் தெரியுமா?

Famous Actor To Play Villain In Mookuthi Amman 2 : கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாரா நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

Famous Actor To Play Villain In Mookuthi Amman 2 : நயன்தாரா, தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க இருக்கிறார். பெரிய பட்ஜெட் செலவில் உருவாகும் இந்த படத்தின் வேலைகள் சமீபத்தில் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், இதில் வில்லனாக ஒரு பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் யார் தெரியுமா?

1 /7

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு வெளியான படம், மூக்குத்தி அம்மன். தியேட்டரில் வெளியாக இருந்த இந்த படம், கொரோனா ஊரடங்கு காரணமாக ஓடிடியில் வெளியானது. இருப்பினும், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

2 /7

மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை அவர் இயக்கப்போவது இல்லை என்ற தகவல் வெளியானது. அதன் பிறகு, சுந்தர்.சி இந்த படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

3 /7

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம், கிட்டத்தட்ட சுமார் ரூ.100 கோடி பொருட்செலவில் உருவாக இருக்கிறதாம். இந்த படத்தின் பூஜையே, கோவில் போல செட் போடப்பட்டு, அன்னதானம் உள்ளிட்ட கோவிலுக்குறிய சிறப்பு விஷயங்களுடன் நடைப்பெற்றாதாக கூறப்படுகிறது. இப்போது, இந்த படத்தில் நடிக்கும் வில்லன் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

4 /7

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில், ஒரு ஹீரோ நடிகர் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். ஒரு காலத்தில் நயனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்த இவர், இப்போது அவருக்கு வில்லனாக வருகிறார். இவர் யார் தெரியுமா?

5 /7

அந்த நடிகர், வேறு யாருமில்லை. அருண் விஜய்தான். என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக அறிமுகமான இவர், திரையுலகில் கம்-பேக் கொடுத்து இப்போது கலக்கி வருகிறார். இவர்தான் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நெகடிவ் ஷேடில் நடிக்க இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

6 /7

அருண் விஜய், தனுஷ் இயக்கி-நடித்து வரும் இட்லி கடை திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தனுஷுக்கும் நயனுக்கும் ஆகாத நிலையில், இப்போது இருவர் படத்திலும் இவர் கமிட் ஆகி நடித்து வருவது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

7 /7

அருண் விஜய், மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.