ஒரு படத்தில் நடிக்க..பிரபல நடிகைக்கு ரூ.530 கோடி சம்பளம்! யாருன்னு பாருங்க..

Written ByYuvashree
Published: Sep 18, 2025, 01:37 PM IST|Updated: Sep 18, 2025, 01:37 PM IST

Sydney Sweeney 530 Crore Salary Bollywood Movie : பிரபல நடிகை ஒருவருக்கு, அவரது முதல் படத்திற்கே சுமார் ரூ.530 வரை சம்பளமாக வழங்கப்பட பேச்சு வார்த்தை நடந்ததாம். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

Sydney Sweeney 530 Crore Salary Bollywood Movie : ஹாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகையை, இந்தியில் ஒரு படத்தில் அறிமுகம் செய்ய பேச்சு வார்த்தை நடக்கிறதாம். உலகளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவரை பாலிவுட்டில் நடிக்க வைக்க திட்டமிட்டு ஒரு தயாரிப்பு நிறுவனம், இவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாம். இதில் அவருக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்ட சம்பள தொகை, பலரை வாய்பிளக்க வைத்துள்ளது.

Sydney Sweeney1/7

சிட்னி ஸ்வீனி

உலகளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர், சிட்னி ஸ்வீனி. இவருக்கு இந்தியாவிலும் பல லட்சம் பேர் ரசிகர்களக இருக்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு செய்தியாவது இந்த நடிகை குறித்து வராமல் இருக்காது.

Famous Actress2/7

பிரபல ஹாலிவுட் நடிகை

ஹாலிவுட்டில் சிட்னி ஸ்வீனி நடித்திருக்கும் Euphoria தொடர் மற்றும் மேடம் வெப், தி ஹவுஸ்மெயிட் உள்ளிட்ட பல படங்கள் ஹிட் அடித்துள்ளது. இவர், கவர்ச்சிக்கும் பெயர் பெற்றவராக இருக்கிறார்.

Bollywood Debut3/7

பாலிவுட்டில்

சிட்னி ஸ்வீனியை, இந்தியாவில்-அதாவது பாலிவுட் படத்தில் இவரை அறிமுகம் செய்வதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம். இது குறித்த செய்திகள்தான் தற்போது இந்திய சினிமா உலகில் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது.

Talks4/7

பேச்சுவார்த்தை

சிட்னி ஸ்வீனியை, பாலிவுட் படத்தில் முதன்முறையாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படம், அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டாப் 5 இந்திய படங்களுள் ஒன்றாக இருக்குமாம். 

Salary5/7

சம்பளம்

இந்த பாலிவுட் படத்தில் சிட்னி ஸ்வீனியை நடிக்க வைக்க, அவருக்கு சம்பளமாக ரூ.530 கோடி பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை, எந்த இந்திய நடிகைக்கும் இவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டதில்லை. 

கதை6/7

Story

சிட்னி ஸ்வீனி நடிக்கிறாரா இல்லையா என்பது இன்னும் உறுதியாகாத நிலையில், இந்த கதை குறித்தும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஹாலிவுட் மாடல் ஒருவர், இந்திய செலிப்ரிட்டியை காதலிப்பது போன்ற கதையாம் இது. இதில், ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Will She Act7/7

நடிப்பாரா

சிட்னி ஸ்வீனி, தனது சம்பள தொகையை கேட்டு அதிர்ந்து போனதாகவும், இருப்பினும் இன்னும் நடிப்பதை உறுதிப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.