அப்பா-அம்மாவாக ப்ரமோட் ஆகும் நட்சத்திர தம்பதி! ரசிகர்கள் வாழ்த்து..
தமிழ் திரையுலகில், முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். வைரமுத்துவிடும் 5 ஆண்டுகள் துணை எழுத்தாளராக வேலை பார்த்த இவர், பின்பு திரைப்படங்களுக்கு பாடல் எழுத தொடங்கினார்.
சினேகன், படங்களுக்காக பாடல் எழுதுவது மட்டுமன்றி ஒரு சில படங்களில் துணை கதாப்பாத்திரமாகவும் நடித்திருக்கிறார்.
தமிழ், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் முக்கிய போட்டியாளராக பங்கு பெற்ற இவர் பின்பு அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் கமல்ஹாசனின்மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார் .
பாடலாசிரியர், நடிகர், அரசியல்வாதி போன்ற பன்முக திறமைகளை கொண்ட இவர் கடந்த 2021ஆம் ஆண்டு கன்னிகா ரவி எனும் நடிகையை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்தை நடிகர் கமல்ஹாசன் முன்நின்று நடத்தி வைத்தார். அப்போது “நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னோரு உயிர்தானடி..” என்று கூறி வாழ்த்தினார்.
கமல்ஹாசன் கூறியது போல இப்போது கன்னிகா ரவி கர்ப்பம் தரித்திருக்கிறார். இந்த செய்தியை தனது கணவரிடம் கூறி சர்ப்ரைஸ் செய்திருக்கும் இவர், ஆனந்த கண்ணீர் வடிக்கும் காட்சி பதிவாகியிருக்கிறது.
சினேகன்-கன்னிகா தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
“நாங்க அப்பா அம்மா ஆகபோறோம்.... உங்கள் எல்லோருடைய அன்பும் வாழ்த்தும் வேண்டும்” என்று அவர்கள், தங்களின் பதிவில் குறிப்பிட்டிருக்கின்றனர்.