Madhampatty Rangaraj About His Second Marriage : நடிகரும் சமையல்கலையில் கைதேர்ந்தவருமான மாதம்பட்டி ரங்கராஜ், தனது இரண்டாம் திருமணம் குறித்து முதன்முறையாக வாய் திறந்திருக்கிறார். அது குறித்து இங்கு பார்ப்போம்.
Madhampatty Rangaraj About His Second Marriage : மெஹந்தி சர்க்கஸ் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர், நடிகர் மட்டும் கிடையாது, ஒரு சமையல் கலை வல்லுநரும் கூட. பல திரை பிரபலங்களின் வீட்டு விஷேஷங்களுக்கு இவர்தான் கேட்டரிங் ஆர்டர் செய்து கொடுப்பார். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், இவர் தற்போது ஆடை வடிவமைப்பாளர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரை 2வதாக திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் பிரபலமான செஃப்களுள் ஒருவர், மாதம்பட்டி ரங்கராஜ். இவர், மெஹந்தி சர்கஸ் மற்றும் பென்குயின் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ், கார்த்தி, ராஜமௌலி உள்பட பல பிரபலங்களின் வீட்டு விஷேஷங்களுக்கு கேட்டரிங் ஆர்டர் செய்து கொடுத்துள்ளார். இப்போது வரை, திரை பிரபலங்கள் அவர்களின் வீட்டு விழாக்களுக்கு மாதம்பட்டிதான் சமைத்து கொடுக்கிறார்.
கடந்த சில வாரங்களாக மாதம்பட்டி ரங்கராஜின் பெயர்தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. காரணம், இவரும், திரை பிரபலங்களுக்கு ஆடை வடிவமைத்து கொடுக்கும் ஜாய் கிரிஸில்டா என்பவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
ஜாய் கிரிஸில்டா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் தினத்தை மாதம்பட்டி ரங்கராஜுடன் கொண்டாடியதாக பதிவிட்டிருந்தார். அவர் கையெழுத்து போடும் போது கூட ஜாய் ரங்கராஜ் என்று எழுதி வருகிறார்.
இந்த விவகாரம் குறித்து அனைவரும் பேசி வந்த நிலையில், மாதம்பட்டியின் மனைவி ஸ்ருதியிடமும் இது குறித்து பலர் கேட்டு வந்தனர். இதையடுத்து, மாதம்பட்டியே இது குறித்து பேசியிருக்கிறார்.
ஒரு ஊடகம் அவரை தொடர்பு கொண்டு இது குறித்து பேசியிருக்கிறது. அப்போது அவரிடம் இரண்டாம் திருமணம் செய்யப்போகிறீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் தன்னை பற்றி பகிரப்படும் அனைத்து தகவல்களையும் தான் அரிவதாகவும், அப்படிப்பட்டகேள்விகளுக்கு தன்னால் பதில் சொல்ல முடியாது எனவும் தெரிவித்து இருக்கிறார்.
விவாகரத்து குறித்து பேசிய அவர், தன் குடும்பத்தில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும், மிகவும் பர்சனல் ஆன விஷயங்களை பத்தி இப்போதைக்கு பேச விருப்பமில்லை என்றும் கூறியிருக்கிறார்.