41 வயதில் 3வது குழந்தைக்கு ஆசைப்படும் புஷ்பா 2 பட நாயகி!! யார் தெரியுமா?
புஷ்பா 1யில் தனலட்சுமி கதாபாத்திரம் மறக்க முடியுமா.. அதேபோல் புஷ்பா 2 ரீஎண்டிரீ கொடுத்து ரசிகர்களை தன்பக்கம் கவனம் ஈர்த்துள்ளார். அனசுயா நகைச்சுவை நிகழ்ச்சியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து குறைந்த காலத்திலே ரசிகர்களிடம் நல்ல அறிமுகமானர்.
புஷ்பா ஒன்றில் அனைவரின் மனதைக் கவர்ந்த அனசுயா, அனல் பறக்கும் கதாபாத்திரத்தில் நடித்து உச்சக்கட்ட பிரபலமடைந்தார்.
அனசுயா தொகுப்பாளினியாக தன் வாழ்க்கை பயணத்தைத் தொடங்கி தற்போது பல பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றும் அரிய வாய்ப்பை கையில் தக்கவைத்துள்ளார்.
அனசுயா சமூக வலைத்தளத்தில் படு கிளாமர் புகைப்படங்கள் பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து தன்வசம் ஈர்த்து வருகிறார்.
அனசுயாவுக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் இவருக்குப் பெண் குழந்தை மீது ஒரு தனிப்பட்ட ஆசை இருப்பதாக வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
ஆண் குழந்தைகள் இருந்தாலும் பெண் குழந்தையை மேல் கொஞ்சம் அதிகமாகவே ஆசை வைப்பேன். இதனால் 3வது குழந்தை பெண் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்றும் அதற்காகத் தீவிரமாகத் தயாராகி வருவதாகவும் கூறியிருக்கிறார்.
41 வயதில் குழந்தை பெற்றெடுக்கப்போகும் அனசுயாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
புஷ்பா 2வில் அனசுயா பக்காவாக நடித்து தெலுங்கு ரசிகர்கள் மனதில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.