Pushpa 2 The Rule Movie Box Office In Tamil Nadu : அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம், தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூலித்திருக்கிறது தெரியுமா?
Pushpa 2 The Rule Movie Box Office In Tamil Nadu : ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம், புஷ்பா 2: தி ரூல். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இப்படம், தமிழகம், கேரளா, தெலங்கானா, ஆந்திரா என இந்திய அளவில் வெற்றி நடை போட்டு வருகிறது. இப்படம், தமிழகத்தில் மட்டும் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
2021ஆம் ஆண்டில், சுகுமார் இயக்கத்தில் வெளியான படம், புஷ்பா : தி ரைஸ். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க, இவருக்கு ஜோடியாக ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது.
புஷ்பா 2: தி ரூல் திரைப்படம், டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. பான்-இந்திய அளவில் ரிலீஸான இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்திருக்கின்றனர்.
புஷ்பா 2 படம், பாகுபலி-ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களின் ப்ரீ புக்கிங் சாதனையை முறியடித்திருக்கிறது.
படம் வெளியாகி 2 நாட்கள் ஆகியிருக்கிறது. இதையடுத்து முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் நேற்று வெளியானது. அதில், முதல் நாளிலேயே இப்படம், 294 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
புஷ்பா 2 படம், கர்நாடகாவில் மட்டும் சுமார் 23 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் புஷ்பா 2 படம், சுமார் 11 கோடி வசூலித்திருக்கிறதாம்.
இந்த வருடத்தில், அதிவேகமாக முதல் நாளில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களில், 7வது இடத்தை பிடித்திருக்கிறது புஷ்பா 2.