Siragadikka Aasai Serial Actress Rejected Dhanush Movie : தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக விளங்குபவர், தனுஷ். இவர் நடித்த ஒரு படத்தில் பிரபல சீரியல் நடிகை ஒருவரை நடிக்க சொல்லி கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் அதை மிஸ் செய்திருக்கிறார். அது என்ன படம் தெரியுமா?
Siragadikka Aasai Serial Actress Rejected Dhanush Movie : தமிழ் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்ற சீரியல்களுள் ஒன்று, சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஹீரோயினாக நடிப்பவர் கோமதி பிரியா. இவர், இதுவரை பெரிதாக திரைப்படங்களில் தோன்றியதில்லை. ஆனால், ஒரு முறை தனுஷுக்கு ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அந்த வாய்ப்பும் கை நழுவி போயுள்ளது. அது என்ன படம், என்ன கேரக்டர் தெரியுமா?
கோலிவுட்டின் டாப் நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், தனுஷ்.இவர் நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் ஆன படம் ஒன்றில் ஒரு சீரியல் நடிகையை நடிக்கச்சொல்லி கேட்டிருக்கின்றனர். ஆனால், அந்த நடிகை அவ்வாய்ப்பை தவற விட்டிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
அந்த நடிகையின் பெயர், கோமதி பிரியா. இவரை அனைவரும் சிறகடிக்க ஆசை தொடரின் மூலம் அறிந்திருப்போம். இதற்கு முன்னர் ஓவியா எனும் தொடரிலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
கோமதி பிரியா தனுஷுடன் நடிக்க இருந்த படம் அசுரன். இதனை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஆடிஷன் செய்து அவரை செலக்ட்டும் செய்துள்ளனர்.
ஆனால், அப்போது தெலுங்கு சீரியல் ஒன்றில் அவர் பிசியாக இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியாது என வந்த வாய்ப்பை ரிஜெக்ட் செய்துள்ளார்.
அசுரன் படத்தில் கோமதி பிரியாவுக்கு பதில், அம்மு அபிராமி ஜோடியாக நடித்திருந்தார். இதில், தனுஷின் இளம் வயது முறைப்பெண்ணாக அவர் வந்திருந்தார். அம்மு அபிராமிக்கு, அசுரன் படம் பெரிய ரீச்சை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கோமதி பிரியா, இப்போது சிறகடிக்க ஆசை தொடர் மூலம் பெரிய உயரங்களை தொட்டு வருகிறார். இவருக்கு மாடலிங் வாய்ப்புகளும் வருகின்றன.
கோமதியை சீரியலில் பார்ப்பவர்கள் பலர், இவரை தன் வீட்டு பெண்ணாகவே கருதுகின்றனர்.