Trisha Movie Creates World Record : நடிகை த்ரிஷா நடித்திருக்கும் ஒரு படம் உலக சாதனை படைத்திருக்கிறது. அது எந்த படம்? அந்த படத்தின் ஹீரோ யார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Trisha Movie Creates World Record : தென்னிந்திய அளவில் பெரிய நடிகையாக விளங்கி வருபவர் த்ரிஷா. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கும் இவர், பல ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். இவர், டாப் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஒரு படம் தற்போது சாதனை படைத்திருக்கிறது. என்ன படம் தெரியுமா?
41 வயதாகும் த்ரிஷா, சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் பட ஹீரோயினாக விளங்கி வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.
பல தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் த்ரிஷா, அதன் தமிழ் உருவாக்கத்திலும் நடித்திருக்கிறார். அப்படி அவர் தெலுங்கில் நடித்த ஒரு படம், அதடு.
இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக மகேஷ் பாபு நடித்துள்ளார். 2005ஆம் ஆண்டு உருவான இந்த படம், வெளியான போது ரசிகர்களின் பெரிய வரவேற்பினை பெற்றது. ரிலீஸின் போது, இந்த படம் சுமார் ரூ.22 கோடி ரூபாயையும் வசூலித்திருந்தது.
இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சோனூ சூட், கோட்டா ஸ்ரீநிவாச ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மேலும், த்ரிஷா-மகேஷ் பாபுவின் ஜோடியும் இதில் ஹிட் அடித்திருந்தது.
அதடு படம், தற்போது புதிய உலக சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. இதனை தமிழ் மற்றும் இந்தி மொழியில் கூட டப்பிங் செய்திருக்கின்றனர்.
அதடு படம் தொலைக்காட்சியில் சுமார் 1500 முறை ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளதாம். இதுவே அந்த உலக சாதனை ஆகும்.
இந்த தகவல் தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. தற்போது மகேஷ் பாபு ராஜமௌலி படம் ஒன்றில் நடித்து வருகிறார். த்ரிஷா நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படம் ரிலீஸிற்கு தயாராக உள்ளது.