Photos Of Vijay In Three Looks In Jana Nayagan : ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜன நாயகன் படத்தில் அவர் 3 தோற்றங்களில் தோன்றுகிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Photos Of Vijay In Three Looks In Jana Nayagan : விஜய், அரசியலில் முழு நேரமாக இறங்கும் முன்பு அவர் கடைசியாக நடிக்கும் படம் ஜன நாயகன். ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். பாபி டியோ, பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். இந்த படத்தில் படப்பிடிப்பு, தற்போது கொடைக்காணலில் நடந்து வருகிறது. விஜய், இப்படத்தில் 3 தோற்றங்களில் வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித்தை வைத்தே 3 படங்களை இயக்கிய ஹெச்.வினோத், இப்போது விஜய்யை வைத்து ஜன நாயகன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது.
பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே, ஜன நாயகன் படத்திலும் அவருடன் 2ஆம் முறையாக ஜோடி சேருகிறார். இந்த ஜோடியை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
அனிருத், ஜன நாயகன் படத்திற்கு இசையமைக்கிறார். இதில், புகழ்பெற்ற ராப் பாடகர் ஹனுமான்கைண்ட் ஒரு பாடலை பாடியிருப்பதாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நடிகராக மட்டும் இருந்த விஜய், கடந்த ஆண்டில் இருந்து தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் மாறினார். வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட இருக்கிறார்.
விஜய்யின் கடைசி படம் ஜன நாயகன் என்பதால் பலர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும் அவரது அரசியல் பயணத்திற்கும் வரவேற்பு தெரிவித்து இருக்கின்றனர்.
ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைப்பெற்று வந்ததை தொடர்ந்து, கொடைக்காணலில் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த ஷூட்டிங் சமயங்களில் விஜய் பகிர்ந்திருந்த வீடியோக்கள் மூலமாகவும், புகைப்படங்கள் மூலமாகவும் அவர் படத்தில் எப்படிப்பட்ட தோற்றத்தில் வருகிறார் என்பது குறித்து ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.
ஒரு லுக்கில், நார்மலாக தாடி மீசையுடன் இருக்கும் விஜய், இன்னொரு லுக்கில் முறுக்கு மீசையுடன் காணப்படுகிறார். இன்னொரு லுக்கில், சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கில், கொஞ்சம் கருப்பு முடி கொஞ்சம் வெள்ளை முடியுடன் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.