Actor Shariq Hassan Maria Baby Shower Photos : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் ஷாரிக் ஹாசன். இவர் கடந்த ஆண்டு மரியா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது.
Actor Shariq Hassan Maria Baby Shower Photos : வில்லன் நடிகர் ரியாஸ் கானின் மகன், ஷாரிக் ஹாசன் கடந்த ஆண்டு மரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது குழந்தை பிறக்கவுள்ளது. இதன் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல வில்லன் நடிகர்கள் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் ஆகியோரின் மகன், ஷாரிக் ஹாசன். இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ஷாரிக் ஹாசன் பென்சில், டான், நேற்று இந்த நேரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்த இவர், சில வாரங்களுக்கு பிறகு வெளியேறினார்.
கடந்த ஆண்டு ஷாரிக் மரியா என்பவரை திருமணம் ஆனது. இவர்களது காதல் திருமணம் ஆகும்.
மரியாவிற்கு ஏற்கனவே திருமணமாகி 1 பெண் பிள்ளை இருக்கிறார். அது டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பாக இருந்ததால் அதிலிருந்து விவாகரத்து முடிந்து விட்டது.
ஷாரிக்-மரியா தம்பதிக்கு தற்போது குழந்தை பிறக்க உள்ளது. இதையடுத்து, வளைகாப்பு நிகழ்ச்சி நடைப்பற்றிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் இவர்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த வளைகாப்பு புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த தம்பதிக்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.