Latest Photos Jayam Ravi Aarti Ravi Sons : ரவி மோகன் என தனது பெயரை மாற்றிய ஜெயம் ரவியின் மகன்களின் புகைப்படங்களை அவரது மனைவி ஆர்த்தி வெளியிட்டிருக்கிறார். அவற்றை இங்கு பார்ப்போம்.
Latest Photos Jayam Ravi Aarti Ravi Sons : கடந்த சில நாட்களாகவே, தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார் நடிகர் ரவி மோகன் என்கிற ஜெயம் ரவி. இவர், இன்னும் தனது மனைவிக்கு விவாகரத்து கொடுக்காத நிலையில், பொது வெளியில் வேறு ஒரு பெண்ணை டேட்டிங் செய்வது, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவரது மகன்களின் புகைப்படத்தை, ஆர்த்தி ரவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இதில், அவர்களின் மகன்கள் நன்றாக வளர்ந்து விட்டது தெரிகிறது.
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர், ரவி மோகன். ஜெயம் ரவி என்று இருந்த தனது பெயரை, சில மாதங்களுக்கு முன்பு மாற்றிக்கொண்டார். 2009ஆம் ஆண்டில், இவர் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கடந்த ஆண்டு தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார்.
ரவி மோகனின் அதிர்ச்சிக்குறிய விவாகரத்து அறிவிப்பிற்கு பின்பு, அவர் கெனிஷா என்கிற பாடகியுடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. இவர்கள் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால், இருவரும் அதனை மறுத்தனர். ஆனால், சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளுக்கு திருமணம் நடந்தது. இதில், இருவரும் ஒன்றாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் ரவி மோகனுக்கும் ஆர்த்திக்கும் 2 மகன்கள் இருக்கின்றனர். முதல் மகனின் பெயர் ஆரவ், இரண்டாவது மகனின் பெயர் அயான். ஆர்த்தியும் ரவியும் திருமண உறவில் இருந்த போது தாங்கள் குடும்பமாக இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வந்தனர்.
ரவி மோகனின் முதல் மகன் ஆரவ், அவருடன் டிக் டிக் டிக் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதில் இருவரும் தந்தை-மகன் கேரக்டரில் நடித்திருப்பர்.
ஆர்த்தி ரவி, ரவி மோகனை விட்டு பிரிந்தாரே தவிர இன்னும் விவாகரத்தை வழங்கவில்லை. இந்த சமீபத்தில் அவர் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், தானும் தனது மகன்களும் வாழும் வீட்டை ரவி மோகன் காலி செய்ய சொல்லி நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இதுவரை ரவி மோகனின் மகன்கள் சிறு குழந்தைகளாக இருந்தனர். ஆனால், இருவரும் தற்போது நன்றாகவே வளர்ந்து விட்டனர். ஆரவ்விற்கு தற்போது 14 வயதாகிறது, அடுத்த மகன் அயானிற்கு 10 வயதாகிறது.
அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதை ஒட்டி, ஆர்த்தி தனது மகன்களின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இவற்றை பார்த்த நெட்டிசன்கள், இருவரும் நன்றாக வளர்ந்து விட்டதாக குறிப்பிட்டிருக்கின்றனர்.