IPL 2026: 2026 ஐபிஎல் தொடருக்கான டிரேட் செய்ய வாய்ப்புள்ள 9 முக்கிய வீரர்களின் பட்டியல் இங்கே.
IPL trade players list: ஐபிஎல் 2025 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இன்னும் சில மாதங்களில் மினி ஏலம் வர இருக்கிறது. பல அணிகள் வீரர்களை டிரேட் செய்ய காத்திருக்கிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை டிரேட் செய்ய ஆர்வம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவரை போல் பல வீரர்களை மற்ற அணிகள் குறிவைத்திருக்க வாய்ப்புள்ளது. அப்படி வேறு அணிக்கு மாற இருக்கும் 9 முக்கிய வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்த பட்டியலில் முதலில் இருப்பது ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தான். இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் செய்ய உள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. சஞ்சு சாம்சனுக்கும் ராஜஸ்தான் அணியுடன் சிறு உரசல் இருப்பதால், அவர் சென்னை அணிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.
வெங்கடேஷ் ஐயர் நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.
ஷர்துல் தாக்கூர் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விடுவித்தால், அவரை சிஎஸ்கே டிரேட் செய்ய முயற்சிக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் விருப்பங்களை மேம்படுத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முயற்சிக்கும்,.
ஜெய்ஸ்வால் போன்ற அதிரடி தொடக்க வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிச்சம் விடுவிக்காது. அப்படி ஒருவேளை விடுவிக்க நினைத்தால், அவரை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்க முயற்சிக்கும். ரோகித் சர்மாவுக்கு பிறகு ஒரு வலுவான தொடக்க வீரர் தேவை என்பதால், ஜெய்ஸ்வால் போன்ற அதிரடி வீரரை டிரேட் செய்ய நினைக்கும்.
காயங்கள் காரணமாக ஷமி சமீப காலமாக ஓய்வில் உள்ளார், ஆனால் அவர் உடல் தகுதி பெற்றிருந்தால், அவர் இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகவே தொடருவார். அவர் சிறப்பாக செயல்பட்ட பஞ்சாப் அணிக்கு மீண்டும் திரும்புவது உறுதியாக இருக்கலாம்.
மிடில் ஆர்டர் ஷூட்டிங்கிற்கு பெயர் பெற்ற லிவிங்ஸ்டோன், ஆர்சிபியில் சரியாக தனது வேகத்தைக் கண்டுபிடிக்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போன்ற அணிகளுக்கு சுழற்பந்து வீச்சாளர் பவர் ஹிட்டர் தேவைப்படுவதால், அவர் ஒரு முக்கிய வீரராக இருக்கக்கூடும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்ற இஷான் கிஷன் கடந்த சீசன் சரியாக விளையாடவில்லை. ஒருவேளை அவரை ஹைதராபாத் அணி விடுவிக்க நினைத்தால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் மீண்டும் செல்ல அதிக வாய்ப்புள்ளது.
க்ளென் மேக்ஸ்வெல்லின் எதிர்கால்ம் பஞ்சாப் கிங்ஸ் அணியில் நிச்சயமற்றதாக தெரிகிறது. இருப்பினும், சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அவரது அனுபவத்திலும், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஆட்டங்களை முடிக்கும் திறனிலும் ஆர்வமாக இருக்கலாம்.
வனிந்து ஹசரங்கா தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ளார். அவரை அந்த அணி விடுவிக்க நினைத்தால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹசரங்காவை வாங்க ஆர்வம் காட்டும். ஹைதராபாத் அணிக்கு ஒரு தரமான சுழற்பந்து வீச்சாளரும் பேட்டிங்கிலும் பங்களிக்கக்கூடிய ஒருவர் தேவை என்பதால், இவரை எடுக்கும் முடிவுக்கு வரலாம்.