ஐபிஎல் 2026: இரண்டு தலைமை பயிற்சியாளர்கள் மாற்றம்.. 10 அணிகளின் Head Coach யார் யார்? முழு லிஸ்ட்

List OF IPL Teams Head Coaches: ஐபிஎல் அணிகளில் இரண்டு அணிகள் தங்களின் தலைமை பயிற்சியாளர்களை மாற்றி உள்ளன. இந்த நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளின் தலைமை பயிற்சியாளர்கள் யார் யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம். 

1 /10

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG): லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் இருந்து வருகிறார். வரும் தொடரிலும் இவரே நீட்டிப்பார். லக்னோ அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கான் இருந்த நிலையில், அவர் அந்த அணியில் இருந்து வெளியேறி உள்ளார். இதனால் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் மற்றும் சுழல் ஆலோசகராக கார்ல் குரோவ் ஆகியோர் இணைந்துள்ளனர். 

2 /10

டெல்லி கேபிடல்ஸ் (DC): ஹேமங் பதானியின் பயிற்சியின் கீழ், டெல்லி கேபிடல்ஸ் (DC) அணி, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 சீசனை தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளுடன் சிறப்பாகத் தொடங்கியது. இருப்பினும், அக்சர் படேல் தலைமையிலான DC அணி, தங்கள் வெற்றி வேகத்தைத் தொடரத் தவறி, இறுதியில் IPL 2025 பிளேஆஃப்களுக்குத் தகுதி பெறத் தவறியது. இருப்பினும், IPL 2026 சீசனுக்காக டெல்லி கேபிடல்ஸின் தலைமைப் பயிற்சியாளராக பதானி தொடர உள்ளார். 

3 /10

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH): நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். வரும் சீசனிலும் அவரே தொடருவார். 

4 /10

பஞ்சாப் கிங்ஸ் (PBKS): ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். வரும் 2026 ஐபிஎல் தொடரிலும் ரிக்கி பாண்டிங்கே தொடருவார். 

5 /10

குஜராத் டைட்டன்ஸ் (GT): முன்னாள் இந்திய வீரர் ஆஷிஷ் நெஹ்ரா குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். வரும் 2026 ஐபிஎல் சீசனிலும் அவரே அந்த அணியை வழிநடத்துவார். 

6 /10

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): ஆர்ஆர் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஐபிஎல் சீசனில் ராகுல் டிராவிட் இருந்தார். இந்த நிலையில், புதிய தலைமை பயிற்சியாளராக குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2021 முதல் 2024ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த நிலையில், மீண்டும் அப்பதவிக்கு திரும்பி உள்ளார். 

7 /10

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR): கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் இருந்தார். இந்த நிலையில், வரும் ஐபிஎல் 2026 சீசனுக்கு அபிஷேக் நாயரை நியமித்துள்ளனர். 

8 /10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஆண்டி ஃப்ளவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். வரும் 2026 ஐபிஎல் சீசனிலும் இவரே அப்பதவியில் தொடர்ந்து நீட்டிப்பார். 

9 /10

மும்பை இந்தியன்ஸ் (MI): இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தனே, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவரே வரும் ஐபிஎல் சீசனிலும் அப்பதவியில் தொடர இருக்கிறார். 

10 /10

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் ஃப்ளெமிங் இருந்து வருகிறார். வரும் 2026 ஐபிஎல் தொடரிலும் இவரே தொடருவார்.