நயன்தாரா மட்டுமில்லை! லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட 4 இந்திய நடிகைகள்..

Actress With Lady Superstar Title Before Nayanthara : நயன்தாரா தன்னை இனி லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரை தவிர இந்த படத்திற்குரிய நடிகைகள் வேறு யார் தெரியுமா?

Actress With Lady Superstar Title Before Nayanthara : தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக விளங்கும் நயன்தாரா, சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கை திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தன்னை இனி ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்க வேண்டாம் என அதில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்திய திரையுலகை பொறுத்தவரை நயன்தாரா மட்டுமல்ல, இன்னும் சில நடிகைகளையும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கிறோம். அவர்கள் யார் யார் தெரியுமா?

1 /7

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து டாப் நடிகையாக விளங்குபவர் நயன்தாரா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஹீரோயினாக வலம் வரும் இவர், ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் கால் தடம் பதித்தார்.

2 /7

காதல் தோல்விகள், படத்தோல்விகள் என அனைத்தையும் சந்தித்தாலும் மன உறுதியுடன் அனைத்தையும் எதிர்த்து போராடி, மீண்டும் விட்ட டாப் இடத்தை பிடித்தவர் இவர்.

3 /7

விக்னேஷ் சிவனுடன் திருமணம் முடிந்த பிறகு, தனது குடும்பத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே தனுஷுக்கும் இவருக்கும் இடையேயான நீதிமன்ற மோதல்களும் நடைப்பெற்று வருகிறது. நயன், சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில், “இனி யாரும் தன்னை லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்க வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

4 /7

இத்தனை வருடங்களில் இல்லாமல், திடீரென நயன்தாரா தனது லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறக்க காரணம் என்ன என ஒரு சிலர் தேடி வருகின்றனர். ஆனால், இவருக்கு முன்னர் பல நடிகைகளுக்கு ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுத்துள்ளனர். அவர்கள் யார் யார் தெரியுமா?

5 /7

80களில் தமிழ், இந்தி உள்ளிட்ட திரையுலகங்களை கலக்கியவர் ஸ்ரீதேவி. இவர் மறைந்தாலும், இவருக்கு ரசிகர்கள் கொடுத்திருந்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் இன்னும் மறையவில்லை. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, ஸ்ரீதேவியின் இறந்தநாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது இவர் குறித்து வெளியான பதிவுகளில் பல ரசிகர்கள் இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

6 /7

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஆக்‌ஷன் நாயகியாக வலம் வந்தவர், விஜயசாந்தி. இவர் நடிக்கும் போலீஸ் கதாப்பாத்திரங்கள் இவருக்கென்றே எழுதப்பட்டவை போல இருக்கும். இவர் நடித்த பல படங்களிலும் டைட்டில் கார்டில் இவருக்கு லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.

7 /7

பாலிவுட்டின் திறமையான நடிகைகளுள் ஒருவர், திவ்ய பாரதி. இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த இவர், தனது 19 வயதிலேயே மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இவரது இறந்த நாள் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. இதிலும் இவரை பலர் லேடி சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டிருந்தனர்.