அருண் லால் முதல் தினேஷ் கார்த்திக் வரை: இரண்டு திருமணம் செய்துக்கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

Written ByR Balaji
Published: Nov 03, 2025, 09:14 AM IST|Updated: Nov 03, 2025, 09:14 AM IST

Indian Cricketers Married Twice: இந்திய கிரிக்கெட் வீரர்களில் இரண்டு திருமணம் செய்துக்கொண்டவர்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 

1/7

2/7

அருண் லால்: இந்திய அணியின் முன்னாள் வீரர் அருண் லால் சிறிது காலமே இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். 1982 முதல் 1989ஆம் ஆண்டு வரை விளையாடிய இவர் வெறும் 16 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 13 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இவர் முதலில் தனது முதல் மனைவி ரீனாவை கடந்த சில காலத்திற்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டு 2022ஆம் ஆண்டு புல்புல் சாஹா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். 

3/7

யோக்ராஜ் சிங்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பிரபல வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங், தனது முதல் மனைவி ஷப்னம் சிங்கை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக சத்வீர் கவுரை மணந்தார்.

4/7

வினோத் காம்ப்ளி: இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இவர் இவர் சச்சின் டெண்டுல்கரின் பால்ய நண்பர் ஆவார். இவர் 1998 ஆம் ஆண்டு நோயெல்லா லூயிஸை மணந்தார். ஆனால் இந்த உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. பின்னர் காம்ப்ளி ஃபேஷன் மாடல் ஆண்ட்ரியா ஹெவிட்டை இரண்டாவது முறையாக மணந்தார். அதன் பிறகு அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். 

5/7

ஜவகல் ஸ்ரீநாத்: முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் 1999 உலகக் கோப்பை முடிந்த உடனேயே ஜோத்ஸ்னாவை மணந்தார். ஆனால் இருவரும் சில ஆண்டுகளுக்குப் பிறகு பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்தனர். பின்னர் ஸ்ரீநாத் பத்திரிகையாளர் மாதவி பத்ரவலியை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். 

6/7

முகமது அசாருதீன்: முன்னாள் இந்திய அணி கேப்டன் முகமது அசாருதீன். இவர் முதலில் நௌரீன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். 1987 இல் திருமணம் செய்து கொண்டு 1996 இல் விவாகரத்து செய்தனர், அதன் பிறகு அவர் நடிகை சங்கீதா பிஜ்லானியை மணந்தார்.

7/7

தினேஷ் கார்த்திக்: இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் 2007 ஆம் ஆண்டு தனது பால்ய தோழியான நிகிதா வஞ்சாராவை மணந்தார். ஆனால் நிகிதா மற்றொரு கிரிக்கெட் வீரர் முரளி விஜயை காதலித்தார். தினேஷ் 2012 ஆம் ஆண்டு நிகிதாவை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு சாம்பியன் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலை மணந்தார்.