Weight Loss Diet: உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், டயட் தேர்வு சிறப்பாக இருக்க வேண்டும். உடல் பயிற்சியினால் மட்டும் எடையை குறைக்க இயலாது. அதிலும் உணவில், நார்ச்சத்தும் புரதச்சத்தும் அதிகம் இருக்க வேண்டும்.
உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள், மிக தீவிரமான டயட் முறையை பின்பற்றுவதும் தவறு. சமச்சீர் உணவு அவசியம். புரதச்சத்து முதல் நார்ச்சத்து, வைட்டமின்கள் கனிமங்கள், கொழுப்பு, கார்போஹைட்ரேட் என உடலுக்கு எல்லா சத்துக்களும் தேவை.
வெயிட் லாஸ் டயட்: உடல் கொழுப்பு கரைய, தோற்றத்தை கெடுக்கும் தொப்பை குறைய, குறைவான கலோரி, அதிக நார்ச்சத்து, அதிக புரதம், ஆரோக்கிய கொழுப்புகள், ஓரளவு கார்போஹைட்ரேட்டுகள் என அடங்கிய சமச்சீர் உணவு தேவை. இதற்கு டயட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டிய சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
வெள்ளரிக்காய்: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் மிக முக்கியமாக, தினமும் இருக்க வேண்டிய உணவின் பட்டியலில் வெள்ளரிக்காய் முதலிடம் வகிக்கிறது. மிகக் குறைந்த கலோரிகள், மிக அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து ஆகியவற்றின் காரணமாக, இது சிறந்த வெயிட் லாஸ் குணமாக இருக்கும்.
கீரை வகைகள்: மிகக் குறைந்த கலோரிகளுடன், நார்ச்சத்து வைட்டமின்கள் கனிமங்கள் இரும்புச் சத்து ஆகியவை நிறைந்திருக்கும் கீரை வகைகள், உங்கள் எடை இழப்பு பயணத்தை வெற்றிகரமாக எடுத்துச் செல்லும் சூப்பர் உணவுகள்.
பருப்பு வகைகள்: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், போதுமான அளவு புரதச்சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இது அதிக கலோரிகளை எரிக்க உதவும். உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், உச்சி முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, பருப்பு வகைகள் உதவும்.
முட்டை: ஆரோக்கிய கொழுப்புகளும், அதிக பொருள்களும், அத்தியாவசிய விட்டமின்களும் நிறைந்துள்ள முட்டை ஒரு சூப்பர் ஃபுட் என்றால் மிகை இல்லை. இது வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து, கலோரி உட்கொள்ளலை குறைக்கிறது. உடலில் கொழுப்பை சேர்க்கும் ஹார்மோன்களை சீர் செய்கிறது.
சியா விதைகள்: மிக அதிக அளவு தண்ணீரை உறிஞ்சும் ஆற்றலை கொண்ட சியா விதைகள், வயிறை நிரம்பச் செய்யும் அற்புத உணவு. இதில் உள்ள எக்கச்சக்க நார்ச்சத்து, கொழுப்பை எரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும் இதை ஊற வைக்காமல் சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.
நட்ஸ் வகைகள்: ஆரோக்கிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ, கனிமங்கள் ஆகியவை அடங்கிய நட்ஸ் வகைகள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகளில் அடங்கும். தினம் ஒரு கைப்பிடி நட்ஸ் சாப்பிடுவதால் எண்ணற்ற, நன்மைகளை பெறலாம்.
சிறுதானியங்கள்: உடல் எடை குறைய அரிசி மற்றும் கோதுமையின் அளவை குறைத்து, அதற்கு பதிலாக சிறுதானியங்களை சேர்ப்பது, உடல் எடை குறைய பெரிதும் உதவும். க்ளூட்டன் அல்லாத சிறுதானியங்கள், எண்ணற்ற ஊட்டச்சத்துக்களின் களஞ்சியங்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.