Lucknow Super Giants: வரும் ஐபிஎல் 2026 மினி ஏலத்தை முன்னிட்டு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் விடுவிக்கும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் விவரங்களை இங்கு காணலாம்.
IPL Mini Auction 2026: வரும் டிசம்பர் 15ஆம் தேதி அன்று மினி ஏலம் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில், வரும் நவம்பர் 15ஆம் தேதி அனைத்து அணிகளும் தாங்கள் விடுவிக்கும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் விவரங்களை வெளியிடும். அந்த வகையில், கடந்த சீசனில் 7வது இடத்தில் லக்னோ அணி சூப்பர் ஜெயன்ட்ஸ் நிறைவடைந்த சூழலில், அந்த அணியின் உரிமையாளர் சஞ்சிவ் கோயங்காவின் பிளான் என்னவாக இருக்கும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
கடந்த 2022ஆம் ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்டஸ் அணிகள் இணைந்தன. லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் உரிமையாளராக RPSG குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சஞ்சிவ் கோயங்கா உள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 2022 மற்றும் 2023 ஆகிய சீசன்களில் பிளே ஆப் வரை முன்னேறிய நிலையில், கடந்த இரண்டு சீசன்களிலும் பிளே ஆப் கூட முன்னேறாமல் லக்னோ அணி திணறி வருகிறது.
முன்னதாக, 2025 ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு நிக்கோலஸ் பூரன் (ரூ.21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ.11 கோடி), ஆயுஷ் பதோனி (ரூ.4 கோடி), மோஷின் கான் (ரூ.4 கோடி) என தக்கவைக்கப்பட்டனர்.
மேலும், 2025ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் ரிஷப் பண்டை (ரூ.27 கோடி) எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டது இதுதான். அதன்பின், ஆகாஷ் தீப் (ரூ.8 கோடி), டேவிட் மில்லர் (ரூ.7.50 கோடி), அப்துல் சமத் (ரூ.4.20), மிட்செல் மார்ஷ் (ரூ.3.40), மார்க்ரம் (ரூ.2 கோடி) ஆகிய முக்கிய வீரரை எடுத்தது.
கடந்த சீசனில் ரிஷப் பண்ட் தலைமையில் லக்னோ அணி 7வது இடத்தில் நிறைவு செய்தது. எனவே, இம்முறை அதிக தொகை கொண்ட முக்கிய வீரர்களை வீரர்களை விடுவித்து, மினி ஏலத்தில் காம்பினேஷனுக்கு ஏற்ற சரியான வீரர்களை எடுக்க அந்த அணி திட்டமிடும். குறிப்பாக தற்போது அந்த அணிக்கு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரின் தேவை அதிகமுள்ளது. லக்னோ அணி இந்த மினி ஏலத்தை முன்னிட்டு விடுவிக்க இருக்கும் வீரர்கள் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் விவரங்களை இங்கு காணலாம்.
விடுவிக்கும் வீரர்கள்: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மயாங்க் யாதவ், ஆகாஷ் தீப், டேவிட் மில்லர் ஆகியோரை விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஷாமார் ஜோசப் டி20ஐ-இல் இன்னும் சிறப்பாக செயல்படவில்லை என்பதால் அவரை விடுவிக்க வாய்ப்புள்ளது. மேலும், திக்வேஷ் சிங் ராத்தி சிறப்பாக விளையாடுவதால் ரவி பிஷ்னோய் மீதான தேவை அணியில் குறைந்துள்ளது. அவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்ததால் அவரை ஏலத்திற்கு விடுவித்து இன்னும் குறைந்த தொகையில் எடுக்க லக்னோ திட்டமிடலாம். இன்னும் சில சிறிய தொகை கொண்ட வீரர்களையும் விடுவிக்கலாம்.
லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி, இந்த மினி ஏலத்தில் ரூ.27 கோடி முதல் ரூ.40 கோடி பர்ஸ் தொகையுடன் வரும். 3-4 வெளிநாட்டு வீரர்கள் குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களை எடுக்க லக்னோ அணி திட்டமிடும்.
தக்கவைக்கும் வீரர்கள்: ரிஷப் பண்ட், ஐடன் மார்க்ராம், ஆர்யன் ஜூயல், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், அப்துல் சமத், ஷாபாஸ் அஹமத், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, ஆயுஷ் பதோனி, ஷர்துல் தாக்கூர், ஆவேஷ் கான், மணிமாறன் சித்தார்த், திக்வேஷ் சிங், பிரின்ஸ் யாதவ், மேத்யூ பிரிட்ஸ்கி, ஹிம்மட் சிங்