ICC T20 World Cup: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில், 2 தேசிய அணிகளுக்காக விளையாடிய 5 வீரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
ICC T20 World Cup History: இதுவரை 9 முறை ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றிருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கையில் 10வது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.
1/8ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் வரும் பிப். 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் இத்தொடர் நடைபெறுகிறது.
2/8இதுவரை 9 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட அணிகள் தலா 2 முறையும்; பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் தலா 1 முறையும் ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளன. தற்போது 10வது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.
3/8இந்தச் சூழலில், ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இரண்டு தேசிய அணிகளுக்காக விளையாடிய ஐந்து வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
4/8கோரே ஆண்டர்சன்: 2014 டி20 உலகக் கோப்பை நியூசிலாந்து அணிக்காக விளையாடி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 36 பந்துகளில் சதம் அடித்தார். ஆனால் இவர் 2024 டி20 உலகக் கோப்பையில் இவர் அமெரிக்க அணிக்காக விளையாடினார்.
5/8டிர்க் நான்ஸ்: 2009 டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய இவர், 2010 மற்றும் 2014 டி20 உலகக் கோப்பை தொடர்களில் நெதர்லாந்து அணிக்காக விளையாடினார்.
6/8ரோலோஃப் வான் டெர் மெர்வே: 2009 டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடிய இவர், 2022 மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை தொடர்களில் நெதர்லாந்து அணிக்காக விளையாடி உள்ளார்.
7/8டேவிட் வீஸ்: இவர் 2016 டி20ஐ உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடிய இவர், 2021 மற்றும் 2024இல் நமீபியா அணிக்காக விளையாடினார்.
8/8மார்க் சேப்மேன்: 2014, 2016 டி20 உலகக் கோப்பை தொடர்களில் ஹாங் காங் அணிக்காக விளையாடிய இவர், 2021, 2022, 2024 டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி உள்ளார்.