ராஷ்மிகா போல..காதலை ரகசியமாக வைத்திருக்கும் 6 நடிகைகள்! யாரெல்லாம்?

Written ByYuvashree
Published: Oct 04, 2025, 12:09 PM IST|Updated: Oct 04, 2025, 12:09 PM IST

Actress Who Keep Their Relationship Private : சில தென்னிந்திய நடிகைகள், தங்களின் காதல் உறவை, பிரைவேட்டாக வைத்திருக்கின்றனர். அப்படிப்பட்ட நடிகர்-நடிகைகள் யார் யார் தெரியுமா?

Actress Who Keep Their Relationship Private : சில தென்னிந்திய நடிகைகள் தங்களின் உறவை, திருமணம் வரை காதல் உறவை பிரைவேட்டாக வைத்துக்கொள்கின்றனர். சமீபத்தில், நடிகை ராஷ்மிகாவுக்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவரை போலவே, இன்னும் சில நடிகைகளும் தங்கள் உறவை ரகசியமாக வைத்துள்ளனர்.

Rashmika Mandanna1/7

ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக பல நாட்களாக கிசுகிசு எழுதி வந்தனர். இந்த நிலையில், இருவரும் தங்கள் இல்லத்தில் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும், அடுத்த வருடம் ஜனவரி மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரை போலவே இன்னும் சில நடிகைகளும் தங்கள் உறவை ரகசியமாக வைத்துக்கொண்டுள்ளனர்.

Anupama Parameswaran2/7

அனுபமா

அனுபமாவும், துருவ் விக்ரமும் முத்தம் கொடுத்துக்கொள்வது போல இருக்கும் ஸ்பாடிஃபை ப்ளேலிஸ்ட் சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது. பின்னர், அந்த ப்ளே லிஸ்ட் டெலிட் செய்யப்பட்டது. இப்போது இருவரும் பைசன் படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர். இவர்களுக்குள்ளான உறவு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mrunal Thakur3/7

மிருணாள் தாகூர்

மிருணாள் தாகூரும் தனுஷும் ஒரு பார்டியில் சந்தித்துக்கொண்டது காதில் பேசிக்கொண்டது, காதல் கிசுகிசுக்களுக்கு வழி வகுத்தது. அது மட்டுமன்றி, மிருணாள் தாகூர் தனுஷின் சகோதரிகளையும் இன்ஸ்டாவில் ஃபாலோ செய்து வருகிறார். இதனால், இவர்கள் தங்களின் உறவை பிரைவேட்டாக வைத்து கொள்கிறார்களோ என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

Janhvi Kapoor4/7

ஜான்வி கபூர்

நடிகையும், மறைந்த ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர், ஷிக்கர் பஹாரியா என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களும் தங்களின் உறவு குறித்து எங்கும் வெளியில் பேசவில்லை.

Samantha5/7

சமந்தா

நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்பு, சிங்கிளாக இருந்த சமந்தா, இப்போது திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமொருவை டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக வெக்கேஷன் செல்வது-ஜிம் செல்வது என்றிருந்தாலும் இன்னும் தங்கள் உறவு குறித்து வாய் திறக்கவில்லை.

Nidhi Agerwal6/7

நிதி அகர்வால்

தமிழில், ஈஸ்வரன் உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்தவர் நிதி அகர்வால். இவர், தமிழ் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர் இது குறித்து உறுதியாக எங்கும் தெரிவிக்கவில்லை.

சுனைனா7/7

Sunaina

நடிகை சுனைனா, சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்த மோதிரத்துடன் ஒரு போட்டோவை வெளியிட்டார். அவர், துபாய் இணைய பிரபலம் கலீத் அல் அமேரியை காதல் உறவில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இது குறித்த எந்த அறிவிப்பும் அவர் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.