அஜித்திற்கு முன் பத்மபூஷன் விருது பெற்ற 4 தமிழ் நடிகர்கள்! யார் யார் தெரியுமா?

Written ByYuvashree
Published: Apr 29, 2025, 10:25 AM IST|Updated: Apr 29, 2025, 10:25 AM IST

Tamil Actors Who Won Padma Bhushan Before Ajith Kumar : நடிகர் அஜித் குமாருக்கு, சமீபத்தில் பத்மபூஷன் விருது கிடைத்தது. இவருக்கு முன்னர் இந்த விருதுகளை வாங்கிய தமிழ் நடிகர்கள் யார் யார் தெரியுமா?

Tamil Actors Who Won Padma Bhushan Before Ajith Kumar : தமிழ் நடிகர்கள் சிலர், இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதினை பெற்றிருக்கின்றனர். இந்த ஆண்டு, கலைத்துறையில் சாதித்ததற்காக நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், இவருக்கு முன்னர் இந்த மதிப்பிற்குரிய விருதை பெற்றவர்கள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போமா?

அஜித் குமார்1/7

அஜித் குமார்

இந்த வருடம் அஜித்திற்கு ஜாக்பாட் அடித்த வருடமாக அமைந்திருக்கிறது. வரிசையாக 2 படங்கள் ரிலீஸ், அதில் ஒரு படம் ஹிட், கார் ரேஸ் வெற்றி என கலக்கி வரும் அஜித்திற்கு, மகுடத்தில் மாணிக்க கல் போல் அமைந்து விட்டது, பத்ம பூஷன் விருது அறிவிப்பு. கலைத்துறைக்காக இவர் இந்த விருதினை பெற்றிருந்தார். இவருக்கு முன்னர் இந்த விருதினை பெற்ற தமிழ் நடிகர்கள் யார் தெரியுமா?

தமிழ் நடிகர்கள்2/7

தமிழ் நடிகர்கள்

உயரிய விருதான பத்ம விருதுகளை அஜித்திற்கு முன்னர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாங்கியிருக்கின்றனர். அவர்கள், எந்தெந்த வருடம் இந்த விருதை பெற்றனர் என்பதை இங்கு பார்க்கலாம். 

எம் ஜி ஆர்3/7

எம் ஜி ஆர்

மறைந்த மாபெரும் தமிழக தலைவர்களுள் ஒருவர், எம்.ஜி.ஆர். இவர், 1988ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதை பெற்றார்.

சிவாஜி கணேசன்4/7

சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1984ல் பத்ம பூஷன் விருதினை பெற்றார்.

ரஜினிகாந்த்5/7

ரஜினிகாந்த்

தமிழ் நடிகர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2016ல் பத்ம விபூஷன் விருதை வென்றார். இவர், 2000ஆம் ஆண்டிலும் பத்ம பூஷன் விருதை பெற்றிருக்கிறார்.

கமல்ஹாசன்6/7

கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன், 2014ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதை பெற்றிருக்கிறார்.

விஜயகாந்த்7/7

விஜயகாந்த்

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகதாந்த், 2014ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.