30 வயதை கடந்து..தாமதமாக திருமணம் செய்துகொண்ட 7 தமிழ் நடிகைகள்! முழு லிஸ்ட் இதோ..

Written ByYuvashree
Published: Nov 09, 2025, 10:26 AM IST|Updated: Nov 09, 2025, 10:26 AM IST

Tamil Actress Who Had Late Marriage : சில தமிழ் பட நடிகைகள், 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொண்டனர். அந்த நடிகைகளின் பட்டியலை இங்கு பார்ப்போம்.

Tamil Actress Who Had Late Marriage : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளாக இருந்த பலர், தங்களுக்கு பிடித்தவரை 30 வயதை கடந்த பின்பு திருமணம் செய்து கொண்டனர். ரசிகர்கள், இவர்கள் சினிமாவிற்காகத்தான் திருமணத்தை தள்ளிப்போட்டதாக கருதுகின்றனர். ஆனால், அதற்கான காரணம் அவர்களுடையது. அப்படி, வயதை கடந்து திருமணம் செய்துகொண்ட நடிகைகள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம்.

Sameera Reddy1/7

சமீரா ரெட்டி

பிரபல நடிகை சமீரா ரெட்டி, தனது 35வது வயதில், தொழிலதிபர் அக்‌ஷை வார்தேவை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் 2014ஆம் ஆண்டில் நடந்தது. 

Asin2/7

அசின்

நடிகை அசின், தனது 30வது வயதில் 2016ஆம் ஆண்டு தொழிலதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

Sridevi3/7

ஸ்ரீதேவி

மறைந்த நடிகை ஸ்ரீதேவி தனது 33வது வயதில், 1996ஆம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2018ஆம் ஆண்டு, துபாயில் உயிரிழந்தார்.

Nayanthara4/7

நயன்தாரா

பிரபல நடிகை நயன்தாரா, தனது 37வது வயதில், காதலன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது இரட்டை குழந்தைகள் உள்ளன.

Kajal Aggarwal5/7

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால், தனது 35வது வயதில், 2020ஆம் ஆண்டு கௌதம் கிச்சிலு என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இப்போது ஒரு குழந்தை உள்ளது.

Shriya Saran6/7

ஷ்ரேயா

நடிகை ஷ்ரேயா, ஆண்ட்ரே என்கிற வெளிநாட்டவரை, 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை செய்து கொண்ட போது அவருக்கு வயது 35. இவர்களுக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

Sneha7/7

சினேகா

நடிகை சினேகா, 31 வயதில் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் 2012ஆம் ஆண்டில் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.