This Week OTT Release Movies: இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் இறங்கும் படங்கள், சில வாரங்களுக்கு பின்னர் ஓடிடி தளங்களில் வெளியாவது வழக்கம். அப்படி இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் தமிழ், தெலுங்கு, மாலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
தெலுங்கு திரைப்படமான 'ஏஜெண்ட்' இயக்குநர் சுரேந்தர் ரெட்டியால் இயக்கப்பட்டுள்ளது. இதில், மம்மூட்டி, சாக்ஷி வைத்யா, அகில் அக்கினேனி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் மற்றும் திரில்லராக உருவாகிவுள்ள இப்படம் சோனி லைவ் ஓடிடி-யில் நாளை (மார்ச் 14) வெளியாக உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'காதல் என்பது பொதுவுடைமை'. இப்படத்தை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ளார். தன்பாலின ஈர்ப்பாளர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் இன்று (மார்ச் 13) டெண்டுகொட்டாய் ஓடிடி-யில் வெளியாகி உள்ளது.
இயக்குநர் குணா சுப்பிரமணியன் இயக்கத்தில் நடிகர் நடராஜன் நடித்துள்ள திரைப்படம் 'சீசா'. திர்ல்லர் கதைகளத்தை கொண்டுள்ள இப்படம் நாளை (மார்ச் 14) ஆஹா ஓடிடி-யில் வெளியாக உள்ளது.
கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 2கே லவ் ஸ்டோரி. இப்படம் நாளை (மார்ச் 14) அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி-யில் வெளியாக உள்ளது.
நானா படேகர் நடிப்பில் அணில் சர்மா இயக்கிவுள்ள திரைப்படம் vanvaas. இப்படம் நாளை (மார்ச் 14) ஜீ5 பிரீமியம் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.
காமெடி த்ரில் கலந்த படமாக உருவாகி உள்ள இப்படத்தில் பசில் ஜோசப் நடித்துள்ளார். இப்படம் நாளை (மார்ச் 14) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.