Actress Who Became 2nd Wife : சில நடிகைகள், திருமணமாகி விவாகரத்து பெற்ற நபர்களை திருமணம் செய்து, இரண்டாவது மனைவியாக மாறியிருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
Actress Who Became 2nd Wife : நடிகைகள் பலர், தங்கள் திரை வாழ்க்கையை முன்னிறுத்தி தாமதமாக திருமணம் செய்து கொள்வதுண்டு. அப்படி செய்து கொள்ளும் திருமணங்கள், பெரும்பாலான சமயங்களில் காதல் திருமணங்களாகத்தான் இருக்கும். இதில் ஒரு சிலர், திருமணமாகி விவாகரத்து பெற்றவர்களை திருமணம் செய்து கொள்வர். அப்படிப்பட்ட நடிகைகள் யார் யார் தெரியுமா?
தென்னிந்தியாவில் ஸ்டார் நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார், சோபிதா துலிபாலா. இவருக்கும், நாக சைதன்யாவிற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. நாக சைதன்யா, இதற்கு முன்னர் சமந்தாவுடன் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்திருந்தார்.
80 மற்றும் 90களில் டாப் நடிகையாக இருந்தவர், அமலா. இவர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை 1992ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்கு முன்பு நாகார்ஜுனா, லக்ஷ்மி என்பவருடன் திருமண உறவில் இருந்தார். இவர்களுக்கு, 1990ல் விவாகரத்து ஆனது.
ஹன்சிகா மோத்வானி, 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தொழிலதிபர் சோஹைல் கதூரியாவை திருமணம் செய்து கொண்டார். சோஹைல் இதற்கு முன்னர், ஹன்சிகாவின் தோழி ரிங்கி என்பவருடன் திருமண உறவில் இருந்து, பின்னர் விவாகரத்து பெற்றார். தற்போது, ஹன்சிகாவும் சோஹைலும் பிரிந்து வாழ்வதாக சொல்லப்படுகிறது.
நடிகை வரலட்சுமி சரத்குமார், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிக்கோலாய் சாச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நிக்கோலாய், திருமண உறவில் இருந்து விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறார்.
நடிகை ராதிகா, சரத்குமாரை 2001ஆம் ஆண்டில் மணந்தார். சரத்குமார், அதற்கு முன்னர் சாயா தேவி என்பவரை மணந்திருந்தார். அதே போல ராதிகாவும் ரிச்சர்ட் ஹார்டி, பிரதாப் போத்தன் ஆகியோரை வெவ்வேறு சமயங்களில் திருமணம் செய்து விவாகரத்து செய்திருந்தார்.
கமல்ஹாசனை 2வதாக திருமணம் செய்த நடிகை சரிகா. கமல், இவருக்கு முன்னர் பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை திருமணம் செய்திருந்தார். சரிகாவும் கமலும் 1988ல் திருமணம் செய்தனர். 2002ல் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தனர். இவர்களுக்கு ஸ்ருதி மற்றும் அக்ஷரா என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.
ஸ்டார் நடிகையாக, உச்சத்தில் இருந்தவர் ஸ்ரீதேவி. இவர், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை 1996ல் திருமணம் செய்து கொண்டார். போனி கபூர் ஸ்ரீதேவிக்கு முன்பு, மோனா என்பவருடன் திருமண உறவில் இருந்தார். 2018ஆம் ஆண்டில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி மற்றும் குஷி என இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.