2025-ல் உலகின் பேரழிவுகள் நிகழ போகிறது.நோஸ்ட்ரடாமஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்!

உலகில் பல்வேறு இடங்களில் பேரழிவுகள் நிகழ்ந்து வருவதைக் கண் எதிரில் பார்த்து வருகிறோம். ஆனால் மக்களின் பாவங்கள் ஒருபோதும் குறைந்ததுபோன்று தெரியவில்லை. மக்களின் பாவங்கள் அதிகரித்து வருவதால் உலகமும் அழிந்து வருகிறது. மேலும் எப்படி உலகம் அழியப்போகிறது என்று பார்க்கலாம்.

உலகம் தோன்றிய காலம் முதல் தற்போது காலம் வரை மனிதர்களின் நடவடிக்கைகள் மோசமாகி வருகிறது. அந்தவகையில் தீர்க்கதரிசனங்களின் கூற்றுப்படி 2025யில் உலகில் யாரும் எதிர்பார்க்காத பேரழிவுகள் நிகழும் என்று நோஸ்ட்ரடாமஸ் கணித்துக் கூறுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இங்குப் பாருங்கள்.

 

1 /8

நோஸ்ட்ராடாமஸ் என்பவர் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபலமான ஜோதிடர். இவர் பல்வேறு ரகசிய குவாட்ரெயின்களை எழுதியது உலக மக்களை வியக்க வைத்தது. இவரின் கூற்றுகள் நிஜத்தில் நடந்துவருவதால் மக்கள் இவரை பின் தொடர ஆரம்பித்தனர்.

2 /8

இவரது ஜோதிடம் வித்தியாசமாக இருக்கும், அதாவது இயற்கை பேரழிவுகள் மற்றும் புவிசார் அரசியல் போன்றவற்றைக் கவிதையாக எழுதி வெளிப்படுத்துவார்.

3 /8

பிரேசில் நிகழப்போகும் பேரழிவு: அடுத்து வருகிற ஆண்டில் 2025யில் யாரும் நினைத்துப்பார்க்காத மற்றும் தடுக்க முடியாத பேரழிவு நிகழப்போகிறது. இந்த அழிவு அமேசான் காடு பகுதியில் நடக்கலாம் அல்லது கால நிலையில் நிகழலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

4 /8

ஐரோப்பாவில் சுகாதார நெருக்கடி (ம) தொற்று நோய்: ஐரோப்பாவில் நடந்துகொண்டிருக்கும் உக்ரைன் மற்றும் ரஷ்யா போர்கள் விளைவாகச் சுகாதாரத்தில் நெருக்கடி ஏற்படும் என்று சொல்லப்படுகின்றன. இவர் எழுதிய முக்கிய குறிப்பு என்னவென்றால் பழங்கால நோய்கள் வரக்கூடும். அந்த நோய் மக்களிடையே அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.

5 /8

2025யில் பூமியை சிறுகோள் அச்சுறுத்தும் அவை இயற்கை மாற்றங்களை ஏற்படுத்தும்.இத்தகைய தாக்குதல் சாத்தியமற்றது. ஆனால் எந்த நேரத்திலும் எதுவேண்டுமானாலும் நிகழ அதிக வாய்ப்பு உண்டு எனச் சொல்லப்படுகிறது.  

6 /8

தொற்று நோய் பரவல் என்பது ஒரு இடத்தில் ஆரம்பித்துப் பல இடங்களில் பரவிவருவது. தொற்று நோய் ஒருமுறை ஒரு இடத்தில் பரவினால் அது பல கோடிக்கணக்கான மக்களை அச்சுறுத்தும் என்று சொல்கின்றனர்.

7 /8

கடந்த சில அண்டுக்கு முன்பு கொரானா உலக மக்களைத் தாக்கி நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தது உலகமே அறிந்திருக்கும். இது உலக பொருளாதாரத்தை மோசமான நிலைக்குக் கொண்டு சென்றதை அறிந்திருப்போம்.   

8 /8

இந்த கூற்று அனைத்தும் தகவலின் அடிப்படையில் மட்டுமே மக்களுக்கு இந்த செய்தி எழுதப்பட்டது. இதில் எவ்வித கருத்தும் சுயமாக எழுதவில்லை.