குரு - சனியின் வக்ர நிலை.... குறையாத செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளும் 3 ராசிகள்

Published: Apr 25, 2025, 05:08 PM IST|Updated: Apr 25, 2025, 06:34 PM IST

குருவின் வக்ர பெயர்ச்சியும், சனியின் வக்கிரப் பெயர்ச்சியும் ஜோதிடத்தில் சுபமாக கருதப்படவில்லை என்றாலும், சில ராசிகளுக்கு இதனால் சாதகமான பலன் கிடைக்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

பொதுவாக கிரகங்கள் வக்கிர நிலையில் அதிக சக்தி படைத்ததாக இருக்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால், கிரகங்களின் வக்ர நிலையினால் ஏற்படும் நற்பலன்கள் மற்றும் கெடு பலன்கள் இரண்டுமே அதிக அளவில் இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

 

Lord Guru1/9

குருபகவான்

குருபகவான்: அதிர்ஷ்டத்தையும் வளமான வாழ்க்கையையும் அள்ளித் தரும் சுப கிரகமாக கருதப்படும் குரு பகவான், இந்த ஆண்டு அதிசாரமாக பெயர்ச்சி ஆகிறார். அதாவது வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சியாகும் குரு, இந்த ஆண்டு 3 முறை பெயர்ச்சி ஆகிறார். இது அதிசார பெயர்ச்சி எனவும் அழைக்கப்படுகிறது.

Guru Peyarchi 20252/9

குரு வக்ர பெயர்ச்சி 2025

குரு வக்ர பெயர்ச்சி 2025: வரும் மே மாதம் மிதுன ராசியில் நுழையும் குரு பகவான், 5 மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் மாதம் 18ஆம் தேதி கடக ராசிக்கு செல்கிறார். பின்னர் மீண்டும் நவம்பர் மாதம் 11-ம் தேதி வக்ர நிலையில் பெயர்ச்சி அடைந்து மிதுன ராசிக்குள் நுழைகிறார்.

Sani vakra peyarchi3/9

சனி வக்கிர பெயர்ச்சி

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான், கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆன நிலையில், வரும் ஜூலை மாதம் 13ம் தேதி முதல், நவம்பர் மாதம் 18ஆம் தேதி வரை, வக்கிர நிலையில் இருப்பார்.

 

Planet Transit4/9

கிரகங்களின் வக்ர நிலை

கிரகங்கள் சாதாரண நிலையில் இருப்பதைவிட வக்கிர நிலையில் அதிக சக்தி கொண்டதாக இருக்கும். எனவே கிரக நிலைகளால் ஏற்படும் பலன்கள், அது கெடு பலன்கள் ஆனாலும் நற்பலன்கள் ஆனாலும் அதிக அளவில் இருக்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

Guru Sani Vakra Peyarchi5/9

குரு -சனி வக்ர நிலை

குருவின் வக்ர நிலை, சனி பகவானின் வக்ர நிலை இரண்டும் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும், அதிர்ஷ்டங்களையும் அள்ளிக் கொடுக்கும் என்று ஜோதிட வல்லுனர்கள் கணித்துள்ள நிலையில், அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

 

Rishabam6/9

ரிஷப ராசி

ரிஷப ராசியினருக்கு, குரு மற்றும் சனியின் வக்கிர நிலை காரணமாக பேச்சாற்றல் அபரிமிதமாக இருக்கும். வேலையில் தொழிலில் கடின உழைப்பிற்கான அங்கீகாரமும் பலனும் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் பெறும் வாய்ப்பு உண்டு.

Mithunam7/9

மிதுன ராசி

மிதுன ராசியினருக்கு, குருபகவான் மற்றும் சனி பகவானின் வக்ர நிலை காரணமாக, நினைத்த காரியம் அனைத்தும் எளிதில் கைகூடும். மாணவர்களுக்கு பிடித்த இடத்தில் உயர் கல்வி கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கும். வாட்டி வந்த குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

Meenam8/9

மீன ராசி

மீன ராசியினருக்கு குரு பகவானின் வக்ர நிலையும், சனி பகவானின் வக்கிரப் பெயர்ச்சியும் ஆடம்பர வாழ்க்கையை வாழும் வாய்ப்பை கொடுக்கும். மன உறுதி, முடிவெடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும். இதனால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். வாகனங்கள் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு.

 

Disclaimer9/9

பொறுப்பு துறப்பு

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.